இந்திய வெளிவிவகார அமைச்சர், நாளை இலங்கைக்கு விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை (28) இலங்கைக்கு வரவுள்ளார். கொழும்பில் நடைபெறும் பிம்ஸ்ரக் மாநாட்டின் அமைச்சு மட்ட சந்திப்பிலும் அவர் பங்கேற்பார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 2022 போட்டித் தொடர் – கொல்கத்தா அணி,சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று (26) இந்தியாவில் ஆரம்பமானது. தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (26) நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை … Read more

கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவைகள்

விமான நிலையத்தில் 220 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுபாதையில் இருந்து மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பமாகவுள்ளன. முதலாவது விமானம் இன்று காலை 8.40ற்கு மாலைதீவில் இருந்து இரத்மலானை விமான நிலையத்திதை வந்தடையவுள்ளது. முதலாவது விமானம் வருவதினை முன்னிட்டு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அதிதிகள் பங்கேற்கவுள்ளனர். இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து முதலில் மாலைதீவிற்கான விமான சேவை ஆரம்பமாவதுடன் பின்னர் பிராந்தியத்தில் உள்ள ஏனைய … Read more

மாவனெல்ல பிரதேசத்தில் ,மின்னல் தாக்கம்: 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மாவனல்லை பிரதேசத்தில் 25 பேர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாவனல்லை பெமினிவத்தயில் இறுச்சடங்கில் கலந்து கொண்டவர்களே மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சேவையில் ஈடுபடும் ரயில்களில் மேலதிக ரயில் பெட்டிகள்

பண்டிகைக் காலப்பகுதியில் சேவையில் ஈடுபடும் ரயில்களில் மேலதிக ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதனை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் தற்பொழுது நிலவும் ரயில் சாரதிகள் மற்றும் சமிக்ஞை பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக புதிய ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தடை ஏற்பட்டிருப்பதாகவும் பிரதி ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் உறுப்புரை IV அறிக்கை மீதான இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்கள்

பன்னாட்டு நாணய நிதியத்தின் உறுப்புரை IV அறிக்கை மீதான இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை மீது அதன் பிந்திய உறுப்புரை IV அலுவலர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. உறுப்புரை IV செயன்முறை உள்ளடக்குவது; அ) 2021 திசெம்பரில் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுதல், இவ்விஜயத்தின் போது நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி அதேபோன்று பல்வேறு அரசாங்க முகவராண்மைகள், நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் … Read more

நீரேந்து பகுதிகளில் கடும் வறட்சி – நீர் மட்டம் வெகுவாக வீழ்ச்சி

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையையடுத்து காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீர் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் நீரில் மூழ்கி இருந்த பல கட்டிடங்கள், ஆலயங்கள், முதலானவற்றை தற்போது காணக்கூடியதாகவுள்ளது. நீர்த்தேக்கத்தில் நேற்று (25) 12.4 வீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாக மின்சாரதுறை பொறியியலாளர் தெரிவித்துள்ளனர். மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 29.7 வீத நீர் மாத்திரம் எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று கொத்மலை நீர்த்தேகத்தில் 21.5 வீத நீரும் விக்டோரியா நீர்த்தேகத்தில் 33.2 வீதமும், ரந்தனிகலை நீர்த்தேக்கத்தில் 56.1 வீதமும் சமனலவெவவில் 14.6 வீத நீரும் எஞ்சியிருப்பதாகவும் … Read more

IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது – எரிசக்தி அமைச்சர்

இந்திய எரிபொருள் நிறுவனம் நேற்று இரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள விலை அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இதேவேளை ,எரிபொருள் விலையை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரிக்காது என்றும் அமைச்சர் காமினி லொக்குகே கூறினார். 30 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கப்பல் ஒன்று நாளை இலங்கை வரவிருப்பதாக ,அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ரி-ருவன்ரி போட்டிகள் ஜுன் மாதம் கொழும்பில்

அவுஸ்திரேலிய அணி – இலங்கைக்கு எதிர்வரும் ஜுன் மாதம் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஆறு வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி – இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 ரி-ருவன்ரி போட்டிகளில் விளையாடவுள்ளன. ரி-ருவன்ரி போட்டிகள் ஜுன் மாதம் 7ம், 8ம், 11ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளன. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஜுன் மாதம் … Read more

பிரெஞ்சுக் குடியரசின் செனட்டர்கள் குழுவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பிரெஞ்சுக் குடியரசின் செனட்டர்கள் குழுவை 2022 மார்ச் 24, வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்தார். இதன் போது, சுகாதாரச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளிலான ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கையில் பிரெஞ்சு நிறுவனங்களின் முதலீடு, இலங்கையில் இருந்தான பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதிக்கான சந்தைகளை பிரான்சில் விரிவுபடுத்துதல் (குறிப்பாக தேயிலை, மீன்பிடிப் பொருட்கள், ஆடைகள், இரத்திணங்கள் மற்றும் ஆபரணங்கள்), மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு … Read more