கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.13 பி.ப 04.30 வரை) பதிவான தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்சம்…

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.13 பி.ப 04.30 வரை) தேர்தல் தொடர்பாக 42 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.08.13ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 408 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஜனாதிபதி தேர்தலுக்காக வைப்புப் பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 36 வரை உயர்வு…

2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக 2024.08.13ஆம் திகதி வரை வைப்புப் பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 36 வரை அதிகரித்துள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஓகஸ்ட் 14ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 13ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய … Read more

நீர்க்கட்டண குறைப்பு – அமைச்சரவை அங்கீகாரம்

நீர்க்கட்டணத்தை ஓரளவு வீதத்தால் குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை அமுல்படுத்துவதற்காக 2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2024.07.16 ஆம் திகதியிலிருந்து இலங்கை மின்சார சபை மின்சாரக் கட்டணத்தை குறைத்துள்ளமையாலும், எரிபொருள், இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் வட்டிக் கிரயம் போன்றவற்றின் கிரயம் குறைவடைந்திருப்பதைக் கருத்திலெடுத்து, நீர்க்கட்டணத்தை ஓரளவு வீதத்தில் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நேற்று (12.08.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: … Read more

இஞ்சி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

அடுத்துவரும் மூன்றுமாத காலப்பகுதிக்குள் 3000 மெற்றிக்தொன் பச்சை இஞ்சியை இலங்கை அரச வர்த்தக (நானாவித) கூட்டுத்தாபனத்தின் மூலம் கட்டம் கட்டமாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக விவசாய, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்; சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைககே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று (12.08.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 02. உள்நாட்டு இஞ்சி உற்பத்தி மற்றும் விலை … Read more

அரச சேவையில் உள்ள அனைத்து பதவிகளும் 04 பிரதான நிலைகளின் கீழ் வகைப்படுத்தப்படும்

முழு அரச சேவையிலும் உள்ள அனைத்து பதவிகளையும் 04 பிரதான மட்டங்களின் கீழ் தரப்படுத்துவதற்கான பரிந்துரையாக 2025 வரவு செலவுத் திட்டத்தை உள்ளடக்கி நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவையில் … Read more

தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை அதிகரித்தல் …

தேயிலை உற்பத்தி மற்றும் இறப்பர் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாய் வரை அதிகரிக்க சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. 01. தேயிலை உற்பத்தி மற்றும் இறப்பர் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக சம்பள நிர்ணயச் சபை தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க, தேயிலை உட்பத்தி மற்றும் … Read more

அரச துறையில் சம்பளத்திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு

அரச சேவையிலுள்ள சம்பளம், வேதனங்கள் மற்றும் ஏனைய பணிக்கொடைகளை மீளாய்வு செய்து, அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான விதந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நிபுணத்துவக் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.05.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் உதய செனவிரத்ன அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அரச … Read more

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குதல்

2025 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள்இ அரச சேவையின் சாத்தியமான அனைத்துப் பகுதிகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தன்னியக்கமயமாக்கல் ஊடாக இலத்திரனியல் கட்டமைப்பு; மூலம் அரச நிர்வாக முறைமையை (E- Governance) அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்இ வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்இ அமைச்சரவைப் பேச்சாளர்இ கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே … Read more

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்கு அனுமதி

இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” அனுமதித் பத்திரத்தை வழங்க தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 17 (2) இன் கீழ் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) இந்த அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதோடு 2024 ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் இந்த அனுமதி நடைமுறைக்கு வருகிறது. … Read more