அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கொழும்பு மாநகர சபைக்கு அறிவிப்பு

வருடாந்த வரவுசெலவுத்திட்டத்துக்கு சமாந்தரமாக 01/2014 ஆம் இலக்க அரசாங்க நிதி சுற்றுநிருபத்தின் ஆலோசனைக்கு அமைய முறையான செயற்திட்டமொன்றுக்கு அனுமதி பெற்று அதற்கமைய செயற்பட வேண்டும் என அரசங்க கணக்குகள் பற்றிய குழு கொழும்பு மாநகர சபைக்கு வலியுறுத்தியது. 2020 மற்றும் 2021 வருடங்களுக்கான முறையான செயற்திட்டமொன்றுக்கு அனுமதி பெறாமல் செயற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மூலம் புலப்பட்டுள்ளதால் இந்த நிலையை இல்லாமல் செய்வதற்கு துரிதமாக செயற்படவேண்டும் என குழு இதன்போது வலியுறுத்தியது. கொழும்பு மாநகர சபையின் 2017/2018 … Read more

மிகைக் கட்டணவரி சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் ஏப்ரல் 07ஆம் திகதி

மிகைக் கட்டணவரி இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை ஏப்ரல் 07ஆம் திகதி நடத்துவதற்கு பிரதி சாபநாயகர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நேற்றுப் பிற்பகல் (24) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 05 முதல் ஏப்ரல் 08 திகதிவரைக் கூட்டுவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், ஏப்ரல் 06 தவிர ஏனைய நாட்களில் மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 வரையான நேரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more

ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை கொழும்பில் இலங்கை நடாத்துகின்றது

பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) மாநாட்டை இலங்கை அரசாங்கம் அடுத்த வாரம் 2022 மார்ச் 28-30 வரை கொழும்பில் கலப்பின முறைமையில் நடாத்தவுள்ளது. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் முறையே 2022 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ள பிம்ஸ்டெக் சிரேஷ்ட அதிகாரிகள் சந்திப்பு மற்றும் அமைச்சர்கள் சந்திப்பிற்காக இலங்கைக்கு வருகை … Read more

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்26ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை: மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள … Read more

சீனாவிடமிருந்து, இலங்கைக்கு இரண்டாயிரம் மெட்ரிக் தொன் அரிசி

25 இலட்சம் டொலர் பெறுமதியான அரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது. இதற்கமைவாக , இரண்டாயிரம் மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டும் இந்த உதவி வழங்கப்படுவதாக இலங்கைக்கான சீன தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பெடி வீரகோன், எம்.எஸ்.செல்லசாமி, ஜஸ்டின் கலப்பத்தி மற்றும் தங்கேஸ்வரி கதிராமன் ஆகியோரின் மறைவு குறித்து இன்று (25) பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமரினால் முன்வைக்கப்பட்ட இரங்கல் பிரேரணை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பெடி வீரகோன், எம்.எஸ்.செல்லசாமி, ஜஸ்டின் கலப்பத்தி மற்றும் தங்கேஸ்வரி கதிராமன் ஆகியோரின் மறைவு குறித்து இன்று (25) பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமரினால் முன்வைக்கப்பட்ட இரங்கல் பிரேரணை! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பெடி வீரகோன், எம்.எஸ்.செல்லசாமி, ஜஸ்டின் கலப்பத்தி மற்றும் தங்கேஸ்வரி கதிராமன் ஆகியோரின் மறைவு குறித்;;;;த இரங்கல் பிரேரணையை கௌரவ சபையில் முன்வைக்கிறேன். லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து அரசியலுக்கு பிரவேசித்த பெடி வீரகோன் அவர்கள், கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி கற்றவர். லக்ஷ்மன் … Read more

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிநெறிக் கருத்தரங்கு

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறிக் கருத்தரங்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. சிறுவர்களுக்கான செயலகமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய பயிற்சிநெறிக் கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கிற்கு வளவாளர்களாக மாவட்ட முன்பிள்ளை அபிவிருத்தி உதவியாளர் வீ.முரளிதரன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பிள்ளை அபிவிருத்தி உதவியாளர் ரீ.மேகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவர்களை சுதந்திரமான புறச்சூழலில் … Read more

ஐந்து முக்கிய விடயங்களின் கீழ் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்…

“நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்”  என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவரினதும் தலைவராக, அனைத்து மக்கள் மீதும் தாம் ஒருசேர அவதானத்தைச் செலுத்துவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.   நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம்….                                                                                        ஜனாதிபதி. ஐக்கிய இலங்கையில் அனைத்து இனங்களையும் சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வோம்…                                                                 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று, (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் … Read more