இந்திய கடற்படைக் கப்பல் ஷர்தா கொழும்புக்கு வருகை

இந்திய கடற்படைக்கப்பலான ஷர்தா, நவீன இலகு ரக ஹெலிகொப்டருடன் 2022 மார்ச் 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 2.    ரோந்து கப்பலான ஷர்தாவின் கட்டளை அதிகாரியான தளபதி யதீஷ் பதௌதியா அவர்கள் மேற்கு கடற் பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் ஏ.யு.சி டி சில்வா அவர்களை இந்த விஜயத்தின்போது சந்தித்திருந்தார். அத்துடன் இக்கப்பலில் 2022 மார்ச் 24 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் இந்திய அரசின் நன்கொடை … Read more

இலங்கையுடனான ஆளுமைவிருத்தி பங்குடைமையை கொண்டாடிய உயர் ஸ்தானிகராலயம்

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் 2022 மார்ச் 23ஆம் திகதி இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தினம் (ITEC) ஹோட்டல் தாஜ் சமுத்திராவில் கொண்டாடப்பட்டது. ITEC பயிற்சித் திட்டங்களில் கலந்து கொண்டவர்கள், இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு பயிற்சிகளில் கலந்துகொண்ட பலதரப்பட்ட துறைகளையும் சார்ந்த உத்தியோகத்தர்கள், இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்களை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் e-ITEC அமர்வுகளில் கலந்துகொண்டவர்கள் உட்பட கிட்டத்தட்ட 125 விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி … Read more

வங்கிகள் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்யப்படும் வெளிநாட்டுச் செலாவணி தொடர்பிலான தெளிவுபடுத்தல்

வங்கிகள் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்யப்படும் வெளிநாட்டுச் செலாவணி தொடர்பிலான தெளிவுபடுத்தல் 2022.03.21 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில், இலங்கை மத்திய வங்கிக்கு வங்கிகள் விற்பனை செய்யும் வெளிநாட்டுச் செலாவணியின் சதவீதம், 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அண்மையில் அதிகரிக்கப்பட்டமை வங்கிகளுக்கே பிரத்தியேகமாக ஏற்புடைத்தானதெனவும் அது வெளிநாட்டில் பணிபுரிவோர்களினது வெளிநாட்டுச் செலாவணி வருவாய்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதிப் பெறுகைகள் மீதான தற்போதைய தேவைப்பாடுகளின் மீது எந்தவொரு தாக்கத்தினையும் கொண்டிருக்காது என்பதனையும் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த … Read more

கடந்த வாரத்தில் மாத்திரம் 733 டெங்கு நோயாளர்கள்

நாட்டில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் 733 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் வைத்தியர் அதிகாரி இந்திக வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் 613 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த வாரம் நோயாளர்களின் எண்ணிக்கை 120 ஆல் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது சுற்றுச்சூழலை சுத்தம் செய்வது தொடர்பில் ஆலோசனைகள் தேவைப்படின், அது தொடர்பாக தமது சுகாதார வைத்திய … Read more

மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவில் கலந்துகொள்ளாமை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு வருத்தம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த மத்திய வங்கி ஆளுநர், மத்திய வங்கி உயரதிகாரிகள் மற்றும் நாணயச் சபையின் உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமை தொடர்பில் வருந்துவதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (24)  கூடிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். அதற்கமைய, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட … Read more

உலக நாடுகளில் கொரோனா:மக்கள் விழிப்புடனிருக்க வேண்டும்

உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் தற்போது வரையில், முதல் தவணை தடுப்பூசி போடாத சுமார் 50 லட்சம் நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி நபர்களை கண்டறிந்து, அனைத்து மாவட்டங்களிலும் … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு – சற்று குறைந்தது

இந்தியாவில் தினசரி கொரோனா வைரசுபாதிப்பு நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையை விட சற்று குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,685 பேருக்கு கொரோனா வைரசு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1,938-ஐ விட சற்று  அதிகமாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் … Read more

எரிபொருளுக்கான 'வரிசைகள்' குறைவு

நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் வந்துள்ள போதிலும், நேற்றிரவும் சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக பொது மக்கள் வரிசைகளில் காணப்பட்டனர். எவ்வாறாயினும், கடந்த நாட்களை விட தற்போது எரிபொருளுக்கான இந்த வரிசைகள் வெகுவாகக் குறைவடைந்துள்ளன இந்திய கடனுதவியுடன் டீசலை ஏற்றிய  மேலுமொரு கப்பல் நேற்று இலங்கையை வந்தடைந்ததையடுத்து, நாடுபூராகவும் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனூடாக எரிபொருளுக்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை விரைவில் முடிவுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், … Read more

அரச ஊழியர்களுக்கு இடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கௌரவ பிரதமரினால் விருதுகள் வழங்கிவைப்பு

அரச ஊழியர்களுக்கு இடையிலான ஆக்கத்திறன் போட்டி – 2021 விருது வழங்கும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (23) பிற்பகல் நடைபெற்றது. அரச ஊழியர்களின் ஆக்கப்பூர்வமான திறன்களை மேம்படுத்தி மதிப்பீடு செய்து அந்த படைப்புகளை வெளியிடுவதற்கான வாய்ப்பை வழங்குதல் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் கலாசார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார … Read more