வீடுகளில் பெற்றோல்: சேமித்து வைப்பது ஆபத்தானது

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியுடன் வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் கயான் முனசிங்க குறிப்பிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த நாட்களில் பெற்றோல் போன்ற எரிபொருட்களினால் ஏற்படுகின்ற தீச் சம்பவங்கள் … Read more

நாடு முழுவதும் இதுவரையில் 16,995,787 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி

நாட்டில் கொவிட் 19 தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் , 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செவ்வாயன்று 14 ஆயிரத்து 41 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. தொற்றுநோயியல் பிரிவு அறிக்கையின்படி, 1 கோடி 69 இலட்சத்து 95 ஆயிரத்து 787 பேர் கொவிட் 19 தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளதோடு, 1 கோடியே 43 இலட்சத்து 87 ஆயிரத்து 77 பேருக்கு இரண்டாவது வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது டோஸ் 77 இலட்சத்து 19 ஆயிரத்து 703 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளன.. இதில் செவ்வாய்க்கிழமை (22) 7 ஆயிரத்து … Read more

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தி நிறைவேற்றப்பட்டது

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்டது. வரவுசெலவுத்திட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட MF/FP/32/CM/2021/212  மற்றும் 2021 டிசம்பர் 14ஆம் திகதிய அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிக் கொள்கை முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.   • இலங்கை அரசாங்கத்திற்கும், துருக்கி குடியரசின் அரசாங்கத்துக்கும் இடையிலான உடன்படிக்கைக்கு அனுமதி • விலங்கின நலம்பேணல் தொடர்பில் புதிய சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் இதற்கமைய 2022 ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் … Read more

அரசியல் பழிவாங்கும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கம் தாக்கல் செய்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச மற்றும் பகுதியளவிலான அரச அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கௌரவ பிரதமரிடம் கையளிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அரசியல் பழிவாங்கல் நோக்கில் அரச மற்றும் பகுதியளவிலான அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வா அவர்கள் இன்று (24) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளித்தார். அதன்படி, இந்தக் குழுவின் அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பிரதமர் உடனடியாக தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை … Read more

சிறுபோக வேளாண்மை:மட்டக்களப்பு மாவட்டத்திற்கென இரண்டு உரக் கம்பனிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தினை மேற்கொள்வதற்காக விவசாயிகளுக்கு தேவையான சேதனைப்பசளை வழங்குவது தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலொன்று நேற்று (23) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், பசுமை உற்பத்தி செயலணியின் மாவட்ட இணைப்பாளரும் 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார, தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட … Read more

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையை ஜனாதிபதி பார்வையிட்டார்…

இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் ஆசியப் பயண இலக்காக மாற்ற முடியும். இதற்கான தடைகளை நீக்கி, உலகளாவிய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். ஆண்டின் முதல் காலாண்டில் 260,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகையை விட அதிகமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கை அடைய … Read more

அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றன – இலங்கை மத்திய வங்கி அறிக்கை

அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றது – இலங்கை மத்திய வங்கி அறிக்கை முரணாக வெளியிடப்பட்டுவரும் அறிக்கைகளுக்கெதிராக, வங்கித்தொழில் முறைமை உறுதியாகச் செயற்படுகின்றது என்றும் அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றதெனவும், நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும், பொதுமக்களுக்கும் ஏனைய அனைத்து ஆர்வலர்களுக்கும் உறுதியளிக்கின்றது.  

யாழ்ப்பாணத்தில் 'நீதிக்கான அணுகல்' – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்  கலந்துரையாடல்

இவ்வருட முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விஷேட நடமாடும் சேவையின் போது யாழ்ப்பாண மக்களால் இரு அமைச்சர்களினதும் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தொடர் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, 2022 மார்ச் மாதம் 21ஆந் திகதி நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டமொன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் தலைமையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது வனவிலங்கு சரணாலயங்களின் எல்லைகள், யாழ்ப்பாணத்தில் கரையோரப் பாதுகாப்பு ஒதுக்கீடு, … Read more

ரஷ்யாவில், இலங்கை தேயிலைக்கான கேள்வி குறையவில்லை

ரஷ்யாவில் இலங்கை தேயிலைக்கான கேள்வி உள்ளபோதிலும் அதனை ஏற்றுமதி செய்வதில் இலங்கை நெருக்கடியில் உள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான யுத்தம் இடம்பெற்ற போதிலும் இலங்கை தேயிலைக்கான கேள்வி குறையவில்லை என இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. மாற்று வழிகளை பயன்படுத்தி சிரமங்களுக்கு மத்தியில் இலங்கை, ரஷ்யாவிற்கு தேயிலையை ஏற்றுமதி செய்வதாக தேயிலை சபை தலைவர் ஜயம்பதி மொல்லிகொட தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மாற்று … Read more

போலந்து பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

இலங்கைக்கான புதுடெல்லியில் உள்ள போலந்து குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ரடோஸ்லாவ் கிராப்ஸ்கி இன்று (மார்ச் 21) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் பிரியாவிடை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, கேர்ணல் ரடோஸ்லாவ் கிராப்ஸ்கி தனது பதவிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக பாதுகாப்புச் செயலர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் கேர்ணல் கிராப்ஸ்கி மற்றும் ஜெனரல் குணரத்ன ஆகியோருக்கு … Read more