ஜிட்டல் மயப்படுத்தப்பட்ட 1919 அரச தகவல் நிலையத்தின் தொடர்ச்சியான விரிவு படுத்தப்பட்ட சேவை

அரச தகவல் நிலையம் பொது மக்களுக்கு அரச நிறுவகங்களின் தகவல்களை வழங்கும்  24 மணித்தியாலங்கள் செயல்படும் விரிவுபடுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இதுவரையில் இருந்த 1919 துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அரச தகவல்களை வழங்குவதற்கு மேலதிகமாக உடனடி தகவல் சேவை ( Instant messenger   ) வெப் விட்ஜெட் வசதி ( web widgets   ) முகநூல் மற்றும் மின்னஞ்சல் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்ச்சியாக சேவைகள் வழங்கப்படுகின்றன. வெளிநாட்டில் இருந்து தகவல்களை கேட்டறிவதற்கு … Read more

அமெரிக்க அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு…

அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland) அவர்கள் இன்று, (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களைச் சந்தித்தார். இன்று முற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும்  ஜனாதிபதி அவர்கள், திருமதி நூலண்ட் அவர்களிடம் தெரிவித்தார். சைபர் மற்றும் தகவல் தொழிநுட்ப துறைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும்..    உதவிச் … Read more

தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கட்சி, எதிர்க்கட்சி அனைவரும் ஒன்றிணையுங்கள்… – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். குறுகியகால மற்றும் நீண்டகால உத்திகளை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார் மாநாட்டை ஏற்பாடு செய்தல் நேர்மையான ஒரு முயற்சியாகும். அரசியல் இலாபம் பெறுவதற்கு அல்ல… கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு வருகை தந்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி… பங்கேற்காத கட்சிகளுக்கும் வந்து தமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு அழைப்பு… … Read more

மட்டக்களப்பில் ,விசேட தேவையுடைய மாணவர்களின் ஆசிரியர்களுக்கு கலைக்கூறு பயிற்சி

விசேட தேவையுடைய கல்வி அலகுகளில் நிறுவனங்களில் மாணவர்களை வழிப்படுத்தும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கலைகூறு பயிற்சி நெறி,  செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சாரண பயிற்சியினை ஆரம்பிக்கும் முகமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூக சேவைகள் அபிவிருத்தி கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தினர் இணைந்து நடத்திய இந்தஇரண்டு நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வில், … Read more

சிறுவர்கள் மேற்கொள்ளும் அபாயகரமான தொழில்கள் 71

திருகோணமலை மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றைய தினம் (22) மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் கருத்து தெரிவிக்கையில் சிறுவர்கள் மேற்கொள்ளும் அபாயகரமான தொழில்களாக 71 தொழில்கள் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அந்த தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை சில நிபந்தனைகளை தவிர அவர்களை ஒருபோதும் வேலைக்கு அமர்த்த முடியாது. தமது பெற்றோர்கள் மேற்கொள்கின்ற … Read more

இணையவழி On line யூடாக ரயில் ஆசன முன்பதிவுக்கான புதிய முறை அறிமுகம்

இலங்கையில் முதன்முறையாக ரயில் ஆசனங்களை இணையவழியூடாக On line முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் பயணிகள் எதிர்காலத்தில் அனைத்து ரயில்களுக்குமான ஆசனங்களையும் இணையவழியூடாக முன்பதிவு செய்து கொள்ள முடியும். கொழும்பு கோட்டை – பெலியத்த, பதுளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, தலைமன்னார் மற்றும் கண்டி போன்ற நீண்ட தூர ரயில்களுக்கான பயணச் சீட்டுக்களையும் முன்பதிவு செய்வதற்கான வசதியும் கிட்டவுள்ளது. தற்போது புகையிரத பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை டிஜிடல் மயப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் … Read more

ஒரு கிலோ மர முந்திரி(கஜூ)யின் விலை ரூ. 7,000

துப்பரவு செய்யப்படாத மர முந்திரி (கஜூ) இறக்குமதி நிறுத்தப்பட்டதையடுத்து, ஒரு கிலோ மர  முந்திரி விலை ரூ.7,000 ஆக அதிகரித்துள்ளது. புத்தாண்டு காலங்களிலும் மர முந்திரிக்கான கேள்வி அதிகரிக்கும். உள்நாட்டு மர முந்திரிக்கு (கஜூ) சிறந்த சந்தை வாப்பை ஏற்படுத்தும் நோக்கில், முந்திரி (கஜூ) இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. அண்மையில் ஒரு கிலோ கிராம் மர முந்திரி (கஜூ) 250 ரூபா முதல் 350 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ முந்திரியின் … Read more

சர்வகட்சி மாநாடு ஆரம்பம்…  

சர்வகட்சி மாநாடு இன்று (23) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடவும் ஆலோசனைகளை முன்வைக்கவும் இந்த  சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மலையக மக்கள் … Read more