சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கு சலுகை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கு, அவசர தேவைகளில் ஒன்றாகக் கருதி எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அறிவித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சிரமங்களுக்கு உள்ளான சுற்றுலா பஸ்களுக்கு டிப்போக்களின் ஊடாக எரிபொருள் வழங்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சுற்றுலா பஸ்களுக்கு மாத்திரமே இந்த எரிபொருள் வழங்கப்படுகிறது. … Read more

எதிர்வரும் நாட்களில் பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது

மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் போதிய பெற்றோல் கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும் நேற்று இரவும் சில பகுதிகளில் பெற்றோலுக்கான நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இது தொடர்பாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரிடம் வினவியபோது, மேலும் ஒரு மாதத்திற்கு போதுமான அளவு பெற்றோல் கொள்வனவுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது பெற்றோல் மற்றும் டீசல் … Read more

ஓய்வூதிய திட்டத்தில் அதிகமான பயனாளிகள்: தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு பாராட்டு

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தில் அதிகமான பயனாளிகளை இணைத்து தேசிய விருது பெற்றுக் கொண்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தை பாராட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் (21) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இணைத்துக் கொள்ளப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு நோக்குகின்ற அடிப்படையில் தம்பலகாமம் பிரதேச செயலகம் 1019 பயனாளிகளை ஓய்வூதியத் திட்டத்திற்கு இணைத்துக்கொண்டுள்ளது. பிரதேச செயலகம் தேசிய விருது பெறுவதற்கு வழிகாட்டல்களை … Read more

அடுத்த சில நாட்களில்  மாலையில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்23ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டில்,அடுத்த சில நாட்களில்  மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் … Read more

கடற்பகுதிகளில் பலமான காற்று

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து … Read more

“சிசிர ஜயகொடி சியபத மன்றம்  (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு மேலதிக உறுப்பினர்கள் நியமனம்

“சிசிர ஜயகொடி சியபத மன்றம்        (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு மேலதிக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் கௌரவ ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று சபையில் அறிவித்தார். அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ வருண லியனகே, கௌரவ கிங்ஸ் நெல்சன், கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ சுதத் மஞ்சுல, கௌரவ வசந்த யாப்பாபண்டார, கௌரவ பீ.வை.ஜி. ரத்னசேக்கர … Read more

பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக 51 வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்தன. குழு நிலை விவாதத்தின் போது பல்வேறு திருத்தங்களுடனும் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 3வது வாசிப்பின் போது வாக்கெடுப்பின்றி இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை முக்கிய அம்சமாகும். பயங்கராதத்தைக் கட்டுப்படுத்த இவ்வாறான சட்டங்கள் அவசியம் என்று விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இணையவழி தாக்குதல்கள், புனர்வாழ்வு என்பன … Read more

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் உலக நீர் தின நிகழ்வு…

உலக நீர் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று, (22) பிற்பகல் நடைபெற்றது. இந்த ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள் “நிலத்தடி நீர் : புலப்படாததை புலப்படச் செய்யும்” (Groundwater making the invisible visible) என்பதாகும். இதன் மூலம் நீர் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு, விவசாயம், கைத்தொழில், சூழல் கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றங்களின் தழுவலுக்கு நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை … Read more

நீதிக்கான அணுகல் நடமாடும் சேவையின் மீளாய்வு விசேட உயர்மட்ட கலந்துரையாடல்

வட மாகாண மக்களின் சட்ட ரீதியான சிக்கல்களை தீர்ப்பது தொடர்பாக இடம்பெற்ற ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவையின் மீளாய்வு விசேட உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (21) வெளியுறவுத்துறை அமைச்சில் இடம்பெற்றது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.   கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவையில் கிடைக்கப்பெற்ற வடக்கு மாகாண மக்களின் காணி, வனவள, வனஜீவராசிகள், கடற்றொழில், கரையோர பாதுகாப்பு, கடல் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான முறைப்பாடுகள் … Read more