ஆர்ப்பட்டக்காரர்களை தடுக்கும் எந்தவித தடைகளையும், தாக்குதல்களையும் சமகால அரசாங்கம் மேற்கொள்ளவில்லை

கடந்த இரண்டரை வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற எந்தவொரு ஆர்ப்பாட்டங்களின்போதும், ஆர்ப்பட்டக்காரர்களை தடுக்கும் வகையில் எந்தவித தடைகளையும், தாக்குதல்களையும் சமகால அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.. இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்… தற்போது நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. … Read more

நிதி நெருக்கடி நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வாறு செயற்படுவது தொடர்பில்

தற்போதைய நிதி நெருக்கடி நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற பொருளாதார சபை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (22) நடைபெற்ற அமைச்சவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.அரசாங்க தகவல் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்க்ஷவும் இதில் கலந்து கொண்டார். இது தொடர்பாக ஊடகவியலாளர் … Read more

இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான பன்முக உறவுகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மற்றும் கட்டாரின் தூதுவர் அல் சொரூர் கலந்துரையாடல்

கட்டார் அரசின் தூதுவர் மாண்புமிகு ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி. அல்-சொரூர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 21ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகள் பேரவையில் கட்டார் நல்கிய வலுவான ஆதரவையும் இலங்கைக்கான பச்சாதாப அணுகுமுறையையும் பாராட்டிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கையில் நடைபெற்று வரும் நல்லிணக்கம் சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான நீண்டகால … Read more

இன்றைய (22.03.2022) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (22.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:     இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (22.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:    

'பல்கலைக்கழகங்களில் பகிடிவதை” குறித்து புதிய ஆய்வு அறிக்கை

இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் (SGBV) அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அரச பல்கலைக்கழகங்களில் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனவும் புதிய .ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் (UGC) பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான நிலையம், யுனிசெப் உடன் இணைந்து, பழைய , புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் மோதல்கள் நிலவிய பகுதிகளில் காணப்பட்ட பல்கலைக்கழங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. “அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை ,பால் நிலையை … Read more

அடையாளம் காணப்படாத காச நோயாளர்கள் பலர் சமூகத்தில்….

அடையாளம் காணப்படாத காச நோயாளர்கள் பலர் சமூகத்தில் இருப்பதாக காச நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் சமூக சுகாதார விசேட வைத்தியர் திருமதி ஒனாலி ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். வருடத்தில் 14 ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுகின்றனர்.இதற்கு அமைவாக கடந்த வருடத்தில் 6,700 நோயாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காச நோயாளர்களை அடையாளம் கண்டு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று ஒனாலி ராஜபக்க்ஷ குறிப்பிட்டார். காச நோய் ஏற்பட்ட நோயாளர் என்ற அனர்த்தத்துடனான பலரை … Read more

இலங்கையில் ,தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 

கடந்த சனிக்கிழமை வரையில் நாட்டின் சனத்தொகையில் 77.48 வீதமானவர்களுக்கு முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 20 ஆம் திகதி தரவின்படி மொத்த சனத்தொகையில் 65.05 வீதமானவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் 1 கோடியே 69 இலட்சத்து 21 ஆயிரத்து 171 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது . இரண்டாவது … Read more

பூஸ்டர் தடுப்பூசி கையிருப்பு குறைவடைந்தால் …………

நாட்டில் தற்பொழுது பயன்படுத்தப்படும் கொவிட் வைரசு தொற்றை தடுப்பதற்காக. 3 ஆவது டோசுக்காக பயன்படுத்தப்படும் மருந்து கையிருப்பு முடிவடைந்தால் அதனை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு சில காலம் செல்லும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் இதுவரையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் முடிந்தவரை விரைவாக mjid பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும் அவர் … Read more

கடற்றொழிலாளர்கள் முன்னறிவிப்புகள் தொடர்பில் ….

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் மார்ச் 21 ஆம் திகதி பிற்பகல் 11.30 மணிக்கு தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக வட அகலாங்கு 14.00 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 94.00 E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளது. அது வடக்கு திசையில் அந்தமான் தீவுகளை விட்டு விலகி நகரக்கூடிய … Read more

இலங்கைக்கு தேவையான எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க சீன அரசாங்கம் தயார்

இலங்கைக்கு தேவையான எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க சீன அரசாங்கம் தயார் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹேங் தெரிவித்துள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சீன திட்டங்கள் ஊடாக 11 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு துறைமுக நகரத்துக்கு 1.5 அமெரிக்க மில்லியன் டொலர்கள் முதலீடு கிடைத்திருப்பதாகவும் சீன தூதுவர் குறிப்பிட்டார். உத்தேச அம்பாந்தோட்டை தொழிற்சாலை வலயத்தில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கு ஒன்று தசம் ஐந்து … Read more