இலங்கையில், எதிர்வரும் 30ம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு

பிம்ஸ்ரெக்ஸ் அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இம்முறை இந்த அமைப்பின் தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் வரவுள்ளார். அடுத்த தலைமைத்துவம் அவருக்கு வழங்கப்படவுள்ளது. ஏனைய நாடுகளின் தலைவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். எதிர்வரும் 29ம் திகதி 7 உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த … Read more

இலங்கை மத்திய வங்கி, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாணயக்குற்றியினை வெளியிடுகிறது

நாட்டின் முதலாவது மருத்துவபீடம் என்ற ரீதியில் நாட்டிற்கு அது வழங்கிய பங்களிப்பினை அங்கீகரிக்கின்ற விதத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் ரூ.20 முகப்புப் பெறுமதியுடன்கூடிய சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியொன்றினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இந்நாணயக்குற்றியானது கொழும்பு பல்கலைக்கழக்கத்தின் மருத்துவபீடத்தின் கோரிக்கைக்கிணங்க வெளியிடப்பட்டது. முழுவடிவம் https://www.cbsl.gov.lk/sites/default/files/press_20220321_cbsl_issues_150th_anniversary_of_faculty_of_medicine_uoc_commemorative_coin_t.pdf

20 ரூபாய் மதிப்புள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள்…

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினதும் இந்நாட்டின் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பினதும் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 20 ரூபாய் பெறுமதியுள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன. கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் திருமதி சந்திரிகா எல். விஜேரத்ன மற்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி.அனுர குமார ஆகியோர் இன்று, (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கு நினைவு நாணயங்களை வழங்கி வைத்தனர். மத்திய வங்கி … Read more

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிலையான தேசிய கொள்கை ஒன்று அவசியம்…

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட  பல தரப்பு மாநாட்டை கூட்டி, நிலையான அபிவிருத்திக்காக திட்டமொன்றை வகுப்பதன் முக்கியத்துவம் மற்றும் ஏனைய 13 விடயங்களை உள்ளடக்கிய வகையில், மல்வத்து அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். மல்வத்து பீடத்தின் மகாநாயக்க வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வண.வரகாகொட ஞானரதன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் இந்தக் கடிதம் ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. … Read more

மஹர பிரதேச சபையின் நான்கு மாடி பல்நோக்கு கட்டிடம் கௌரவ பிரதமரின் தலைமையில் திறந்து வைப்பு

மஹர பிரதேச சபையின் நான்கு மாடி பல்நோக்கு கட்டிடம் இன்று (21) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. பிரித் பாராயணத்திற்கு மத்தியில் நினைவு பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், அதனை தொடர்ந்து கட்டிடத்தை திறந்துவைத்த கௌரவ பிரதமர் வாழ்த்துக் குறிப்பு ஒன்றையும் முன்வைத்தார். தன்போது மஹர பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஏ.சுதீமா சாந்தனி கௌரவ பிரதமருக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தார். 108 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பல்நோக்குக் கட்டிடமானது … Read more

தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனைக் குழுவினால் ஐந்து பரிந்துரைகள்…

தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு விரைவாக செயற்படுத்த வேண்டிய ஐந்து பரிந்துரைகளை முன் வைத்துள்ளது. ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் முதற் தடவையாக இன்று (21) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களையும் தேசிய பொருளாதார சபையின் உறுப்பினர்களையும் சந்தித்து பரிந்துரைகளை முன்வைத்தனர். ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளைத்  தீர்ப்பதற்கு நியமிக்கப்பட்ட தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு  வழங்குவதற்காக 16 பேரைக் கொண்ட ஆலோசனைக் குழுவொன்று மார்ச் மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி அவர்களால் … Read more

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்  

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் 2022 மார்ச் 22 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பிராந்திய மற்றும் இருதரப்புக் கொள்கை விவகாரங்களை துணைச் செயலாளர் நுலாண்ட் மேற்பார்வை செய்கின்றார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை துணைச் செயலாளர் நுலாண்ட் சந்திக்கவுள்ளார். 2022 மார்ச் 23, … Read more

இலங்கைக்கான புதிய எகிப்தியத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான எகிப்தியத் தூதுவர் மகேத் மொஸ்லே, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 19ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். தூதுவர் மொஸ்லேவுக்கு அன்பான வரவேற்பைத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ், இலங்கையிலான அவரது பதவிக்காலத்தின் போது அவருடன் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் மொஸ்லே ஆகியோர் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பரந்த அளவிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், முக்கியமான … Read more

மண்முனைப்பற்றில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டு உதவி திட்டங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் “கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம் – 2022” இற்கு அமைவாக மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் இன்று (21) திகதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் வழங்கப்பட்டன. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கான உதவிகளை வழங்கினார். … Read more