வண.அதபத்துகந்தே ஆனந்த தேரருக்கு நற்சான்றிதழ் பத்திர கையளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பங்கேற்பு…

வண.அதபத்துகந்தே ஆனந்த தேரருக்கு சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ தம்மரதன பிரஞானதிஸ்ஸ என்ற கௌரவ நாமத்துடன் தக்ஷின லங்காவே சமதபல சம்பன்ன பிரதம நீதிமன்ற சங்க நாயக்க பதவி வழங்கப்பட்டது. ஸ்ரீ சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று, (20) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. வண. அத்தபத்துகந்தே ஆனந்த தேரர் ஆற்றிவரும் சாசன, மத, சமூக சேவைகளைப் பாராட்டி … Read more

அந்தமான் கடற்பரப்பில் சூறாவளி: வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 21ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த தாழமுக்கம் மார்ச் 20 ஆம் திகதி பிற்பகல் 11.30 மணிக்கு தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக வட அகலாங்கு 11.30 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 93.40 E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளது. அது வடக்கு திசையில் அந்தமான் தீவுகளை அண்டி நகரக்கூடிய … Read more

புனரமைக்கப்படவுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை கௌரவ பிரதமர் பார்வையிட்டார்

யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று (20) காலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான யுத்தம் காரணமாக மூடப்பட்டது. இத்தொழிற்சாலை 728 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்தாலும், தற்போது அதன் பெரும்பாலான பகுதிகள் குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளன. 2021 பெப்ரவரி 08 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய … Read more

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் கௌரவ பிரதமரினால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்தியநிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், மட்டுவில் நகருக்கு வருகை தந்த கௌரவ பிரதமருக்கு அப்பகுதி மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன், யாழ் … Read more

மில்கோ பால் மா அடுத்த மாதம் 1ம் திகதி தொடக்கம் சந்தைக்கு

தமது தயாரிப்புக்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என்று மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வேறு எந்த நிறுவனமும் பால்மா விலையை அதிகரிக்குமாயின் அதுதொடர்பில் தமது நிறுவனம்  கவனத்திற்கொள்ளாது என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தமது நிறுவனம் மீண்டும் பால்மா உற்பத்தி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இவை அடுத்த மாதம் 1ம் திகதி தொடக்கம் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. இதேவேளை, பால்மா விலை அதிகரிக்கப்பட்டால் பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டியிருக்குமென பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாவனையாளர்கள் கூடுதல் விலைக்கு பால்மாவை கொள்வனவு செய்ய மாட்டார்கள் … Read more

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலை

வர்த்தகர்களின் வருகை குறைவடைந்ததினால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி வகைகள் மேலதிகமாக குவிந்துள்ளன. இதனால் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு தொகை மரக்கறி  மத்திய நிலையத்திற்குக் கிடைத்துள்ளன. அனைத்து மரக்கறி வகைகளும் ஒரு கிலோ மொத்த விலை 150 ரூபாவிற்கும் குறைவாகவே காணப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

ஒரு மாத காலமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு சில நாடுகளில் மீண்டும்…

ஒரு மாத காலமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு சில நாடுகளில் மீண்டும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில்இ உலக நாடுகளில் மீண்டும் தொற்றின் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்இ உலக சுகாதார அமைப்பை சேர்ந்த மரியா வான் கெர்கோவ் Dr Maria D Van Kerkhove  மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வைரஸ் பற்றிய மூன்று தவறான தகவல்களை … Read more

அந்தமான் கடல் பகுதியில் 'அசானி புயல்'

அசானி புயல்’ அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் மதிப்பிட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மேலும் வலுப்பெற்றது. தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு … Read more

Laugf எரிவாயு விலை

Laugf எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 12.5 கிலோ கிராம் எடையைக் கொண்ட எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,199 ரூபாவாகும். 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபாவாகும். 2 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 672 ரூபாவாகும். டொலரின் பெறுமதிக்கு அமைவாக ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையே இந்த விலை அதிகரிப்பிற்குக் காரணமாகும்.