சமரி அத்தபத்துவுக்கு ஐசிசி விருது…

2024 ஜூலை மாதத்திற்கான மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் தலைவி சாமரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில்; முடிவடைந்த மகளிர் ஆசிய இருபதுக்கு 20 போட்டி வெற்றி, மற்றும் போட்டியில் அவரது செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் சமரி அத்தபத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சமரிடன் சேர்த்து, இந்திய வீரர்களான ளுஅசவைi ஆயனொயயெ மற்றும் ளூயகயடi ஏநசஅய ஆகியோரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஆசிய கிண்ணப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக தெரிவான சமரி அத்தபத்து இலங்கை … Read more

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 366 முறைப்பாடுகள் பதிவு

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.12 பி.ப 04.30 வரை) தேர்தல் தொடர்பாக 29 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.08.12ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 366 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் மிதந்து வந்த பானத்தை பருகி மரணமான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் கடற்றொழில் அமைச்சரை சந்திப்பு

ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவேளை கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த பாணத்தை குடித்து மரணமான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சந்தித்தனர். இறந்தவர்களுக்கான நஷ்ட ஈடு தொடர்பாக அமைச்சர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர், விரைவாக குறித்த நஷ்ட ஈடுகள் கிடைக்க உதவுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இச்சந்திப்பின்போது அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டின் பல பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஓகஸ்ட் 13ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 12ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டில்  அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை விருத்தியடைந்து வருகின்றது நாட்டின் பல பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. களுத்துறை, … Read more

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.11 பி.ப 04.30 வரை) பதிவான தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்சம்…

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்;, கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.11 பி;.ப 04.30 வரை) தேர்தல் தொடர்பாக 17 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.08.11ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 337 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக வைப்புப் பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு..

2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக 2024.08.12ஆம் திகதி வரை வைப்புப் பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 32 வரை அதிகரித்துள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.  

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக அலி சப்ரி சத்தியப்பிரமாணம்..

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சற்றுமுன்னர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். தற்போது வகிக்கும் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக இந்த அமைச்சுப் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் வெற்றிடம் இருப்பதாக பாராளுமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

கௌரவ மனுஷ நாணயக்கார மற்றும் கௌரவ ஹரின் பெர்னாந்து ஆகியோரின் பாராளுமன்ற உறுப்புரிமைகள் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக 2024.08.09 முதல் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) மற்றும் 64(5) பிரிவின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற … Read more

உற்பத்தித் துறையில் தொழில்வாய்ப்புக்காக தென் கொரியா செல்லும் மற்றொரு குழு…

உற்பத்தித் துறையில் தொழில்வாய்ப்புக்காக இலங்கையைச் சேர்ந்த 101 பேர் அடங்கிய குழுவொன்று நேற்று (11) தென்கொரியாவிற்கு பயணமாகியுள்ளது. இந்தக் குழுவில் பெண் தொழிலாளர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.;.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் எகிப்திற்கான உத்தியோகபூர்வ சுற்றுப் பயணம் வெற்றிகரமாக நிறைவு

எகிப்து வெளிநாட்டமைச்சர் பத்ர் அப்தலாதியின் அழைப்பின் பேரில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகஸ்ட் 07 தொடக்கம் 09 வரை எகிப்து நாட்டிற்கான உத்தியோகபூர்வ சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இச்சுற்றுப் பயணத்தின் போது அமைச்சர் வெளிநாட்டலுவல்கள் தொடர்பான எகிப்து கவுன்ஸிலின் தலைவரும் தூதுவரமான மொஹமட் அல்- ஒறாபி யை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே நீண்டகாலமாகக் காணப்படும் நல்லுறவை நினைவு கூர்ந்ததுடன், காஸாவின் நிலைமை உட்பட பிராந்தியத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதனிடையே இலங்கை மற்றும் எகிப்து … Read more