வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சீனத் தூதுவர் மரியாதை நிமித்தம் சந்திப்பு

சீனத் தூதுவர் குய் சென்ஹோங்குடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 மார்ச் 18ஆந் திகதி கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இச்சந்திப்பின் போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 65ஆவது ஆண்டு நிறைவையும், 1952ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையிலான ரப்பர்-அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவையும் நினைவுகூரும் வகையில் சீன அதிகாரிகளால் வெளியிடப்பட்ட முதல் நாள் அட்டைப்படம் சீனத் தூதுவரால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற 49வது மனித … Read more

நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரிப்பு  

தற்போது நிலவும் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்துள்ளது. பொதுவாக நாட்டில் நாளாந்த மண்ணெண்ணெய் பாவனை கடந்த காலத்தில் 600 மெற்றிக் தொன்களாகும். ஆனால் தற்போது நாளாந்த பாவனை 850 மெற்றிக் தொன்களாக அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெயை விற்பனை செய்யும் எரிபொருள் நிலையங்களுக்கு ஆகக் கூடுதலான வகையில், மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை ,நாட்டில் எதிர்வரும் சில தினங்களில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு முழு அளவில் … Read more

2022 ஆசிய ரி-20 கிரிக்கட் போட்டி ,ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி இலங்கையில் ஆரம்பம்

2022 ஆண்டின் ,ஆசிய ரி-20 கிரிக்கட் வெற்றிக் கிண்ண போட்டியை இலங்கையில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டித் தொடர் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. கொழும்பில் நேற்று (19)  நடைபெற்ற ஆசிய கிரிக்கட் பேரவையின் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் 40ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வணக்கத்திற்குரிய வனவாசி ராகுல தேரரின் அளப்பரிய அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தினாலேயே நாமல் உயன தேசிய பூங்கா பாதுகாக்கப்பட்டுள்ளது – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

வணக்கத்திற்குரிய வனவாசி ராகுல தேரரின் அளப்பரிய அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தினாலேயே நாமல் உயன தேசிய பூங்கா பாதுகாக்கப்பட்டுள்ளது என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். தேசிய நாமல் உயன 31வது ஆண்டு நிறைவு விழா மற்றும் தேசிய நாமல் உயன சர்வதேச சுற்றாடல் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று (18) பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். தேசிய நாமல் உயன சர்வதேச சுற்றாடல் … Read more

யாழ்ப்பாணம் நாவற்குளி சமித்தி சுமண விகாரையின் பிக்குமார் தங்குமிடக் கட்டிடம் கௌரவ பிரதமரினால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம் நாவற்குளி சமித்தி சுமண விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிக்குமார் தங்குமிடக் கட்டிடம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் இன்று (19) திறந்துவைக்கப்பட்டது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்புடன் இந்த தங்குமிடக் கட்டிடம் கட்டப்பட்டது. பிக்குமார் தங்குமிடக் கட்டிடத்தை திறந்துவைத்த கௌரவ பிரதமர், அப்பகுதியில் உள்ள 50 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 50 போசாக்கு உணவு பொதிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் … Read more

யாழ்ப்பாணத்தில் 50 பாடசாலை மாணவர்களுக்கு கௌரவ பிரதமர் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த மத்திநிலையத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய மீகஹஜதுரே சிறிவிமல நாயக்க தேரரைச் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இன்று (19) சந்தித்து நலம் விசாரித்தார். வணக்கத்திற்குரிய மீகஹஜதுரே சிறிவிமல நாயக்க தேரருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட கௌரவ பிரதமர், அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர், யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த நிலையத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 50 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை … Read more

கொழும்பின் சில பிரதேசங்களில் தடைப்பட்டிருந்த நீர்விநியோகம் வழமை நிலைக்கு

தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசம், இரத்மலானை, கொழும்பு 05, கொழும்பு 06, பத்தரமுல்லை, உடுமுல்ல, ஹிம்புட்டான ஆகிய பிரதேசங்களில் நேற்றிரவு (19) முதல் நீர் விநியோகம் தடைப்பட்டது. கொழும்பு 4ல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது. நீர்க் குழாயில் திடீரென ஏற்பட்ட பாதிப்பினாலேயே நீர் விநியோகம் தடைக்கப்பட்டிருந்தது. எனினும், நீர் விநியோகச் செயற்பாடுகள் தற்போது வழமை நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகம்

ஒரு லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்று விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட எரிவாயு, கெரவலபிட்டிய எரிவாயு களஞ்சிய கட்டடத் தொகுதியில் வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளது. எரிவாயு இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட கொடுப்பனவை செலுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நேற்று நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், எதிர்வரும் சில தினங்களில் கேஸுக்கான தட்டுப்பாடு நீங்கிவிடும் என்று அந்த நிறுவனம் … Read more

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் நாளை இலங்கைக்கு….

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் நாளை இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல் தொகை இதுவாகும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து, சீமெந்து, தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தக் கடன் மூலம் வழங்கியது. அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின்போது இதற்கான உடன்படிக்கை சமீபத்தில் கைச்சாத்திடப்பட்டது. இந்தியா, இதற்கு முன்னரும் ஒன்று தசம் நான்கு பில்லியன் … Read more