மார்ச் 21 ஆம் திகதியளவில் சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 18ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. 2022 மார்ச் 18ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக மையம் கொண்டுள்ளது. அது அடுத்த 24 … Read more

பங்களாதேஷ் கபடி விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளும் மட்டக்களப்பு வீரர்கள்

பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்றுவரும் Bangabandhu International கபடி போட்டியில் பங்கேற்பதற்காக தேசிய கபடி அணிக்காக தெரிவாகியுள்ள மட்டக்களப்பைச் சேர்ந்த கபடி வீரர்களான எல்.தனுஜன், ஏ.மோகனராஜ் , எல்.அனோஜ், ராசோ வென்சி ஆகிய நான்கு வீரர்களும் பங்களாதேஷ் நோக்கி பயணமாகியுள்ளனர். இன்றைய தினம் இடம்பெறவுள்ள போட்டித் தொடரில் விளையாடுவதற்காகவே குறித்த நான்கு வீரர்களும் தேசிய அணி சார்பாக பங்களாதேஷ் நோக்கி பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் 22 முதல் 25 வரை பாராளுமன்றம் கூடும்

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டை எதிர்வரும் 22ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள  (16) அன்று முற்பகல் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகப் பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். இதற்கமைய திருத்தங்களுடன் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படவிருப்பதாக ரோஹனதீர தெரிவித்தார். அன்றையதினம் பாராளுமன்றம் மு.ப 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன் மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை … Read more

சிறுபோகத்திற்கு தேவையான கரிம உரம்:விநியோக நடவடிக்கை ஆரம்பம்

விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கு தேவையான கரிம உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறை எவ்வித தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள முக்கிய குழுவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் சந்திப்பு

இலங்கை தொடர்பான முக்கிய குழுவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மார்ச் 18ஆந் திகதி, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலில் ஈடுபட்டார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, கொழும்பு 2021 மார்ச் 18 —

600 ஹெக்டேர் காணியில் கெளதாரிமுனையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் திட்டம் அமையும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

கிளிநொச்சி – பூநகரி கெளதாரிமுனை தெற்கு கடற்கரை பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்படவுள்ள பிரதேசத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் சேபாலவும் 15.03.2022 அன்று மாலை பார்வையிட்டனர். இதன்போது, திட்டம் தொடர்பில் அதிகார சபையின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெளிவுபடுத்தினார். இந்நிலையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய வகையில் இந்த திட்டம் அமையும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் 240 மெகாவாட் … Read more

யாழ்ப்பாணம் – கிளிநொச்சியில் ‘ஏற்றுமதிக் கிராமம்’ திட்டத்தை வினைத்திறனுடன் செயற்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அத்தியாவசியப் பொருடகள் விநியோகத்தினை மேலும் மேம்படுத்தல் மற்றும் ‘ஏற்றுமதிக் கிராமம்’ எனும் திட்டத்தினை வினைத்திறனுடன் செயற்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர். http://www.epdpnews.com

பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா – பந்துல குணவர்த்தன விஜயம்!

கற்பக தருவான பனை சார் உற்பத்திகளை மேலும் மெருகேற்றி சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்தல் மற்றும், சதோச விற்பனை நிலையங்கள் மூலம் உள்நாட்டு சந்தை வாய்ப்பினை அதிகரித்தல் போன்றவை தொடர்பாக ஆராயும் நோக்கில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளடங்கிய பிரமுகர்கள் பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இதனிடையே ஊர்காவற்துறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கடற்றொழில் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பிரதிநிதிகள், ஊர்காவற்துறை … Read more

நீரிழிவு நோயால் காலை இழந்த மூன்று குழந்தைகளின் தாய்க்கு பிரதமரின் பாரியாரினால் செயற்கை கால் வழங்கிவைப்பு

நீரிழிவு நோயினால் காலை இழந்து தவித்து வந்த றம்புக்கனை, சியம்பலங்கமுவ பகுதியைச் சேர்ந்த திருமதி .அனுஷா அத்தநாயக்கவுக்கு, அலரிமாளிகையில் வைத்துநேற்று (17) பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்க்ஷ அவர்களினால் செயற்கை கால் வழங்கி வைக்கப்பட்டது. சுமார் பத்து வருடங்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த ஐம்பத்து ஐந்து வயதுடைய குறித்த பெண்மணி பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்க்ஷவுக்கு தனது துன்பங்களை நெரிவித்ததன் விளைவாக செயற்கைக் கால் வழங்கப்பட்டது. இதுவரை தானடைந்த துன்பத்திற்கு விமோசனம் … Read more