திருப்பெருந்துறை நகர அபிவிருத்தி வேலைத்திட்டம்: மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடணத்திற்கு அமைவாக செழுமையான 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் மக்கள் பாவனைக்காக இன்று (18) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. திரு.சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிபாரிசுக்கு அமைவாக இந்த திட்டத்தின் கீழான நடைபாதை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு திருப்பெருந்துறை வீதியில் சுமார் 300 மீற்றர்  நீளமான இந்த நடைபாதை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுமார் … Read more

கொரோனா வைரசு தொற்று குறைகிறதா?

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39.75 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18இலட்சத்து 94 ஆயிரத்து327 பேருக்கு கொரோனா … Read more

சென்னையில், 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்

44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளை எதிர்வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 முதல்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் ‘செஸ் ஒலிம்பியாட்’ முக்கியமானது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட்டில் சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டிற்கான போட்டிகள் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் … Read more

இந்தியா, இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் குறுகிய கால சலுகைக் கடன்

இந்தியா இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை குறுகிய கால சலுகைக் கடனாக வழங்கவுள்ளது. இதற்கான உடன்படிக்கை புது டெல்லியில் உள்ள இந்திய நிதி அமைச்சில் நேற்று (17) கைச்சாத்திடப்பட்டது. இந்திய அரச வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் பிரதி பொது முகாமையாளர் ஷிரி புஷ்கார் மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சின் செயலாளர் .ஆட்டிகல ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ ,இந்தியய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்திய … Read more

சீகிரியா நாட்டின் முதலாவது சூழல் நேய சுற்றுலா வலயம் – உள்ளக விமான வசதிகளுக்கும் நடவடிக்கை

பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீனற்ற நாட்டின் முதலாவது சுற்றாடல் நேயமிக்க சுற்றுலா வயலமாக சீகிரியா இந்த வருடம் பெயரிடப்படவுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, மத்திய கலாசார நிதியம், வனவிலங்குகள் திணைக்களம் ஆகியன இணைந்து இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சிகிரியாவைப் பார்வையிடச் செல்லும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சிகிரியாவை அண்மித்த பகுதியில் உள்ளக விமான … Read more

பங்கபந்து கபடி வெற்றிக் கிண்ண தொடர்: இலங்கை அணி பங்கேற்பு

பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்கபந்து கிண்ணக் கபடிப் போட்டியில் இலங்கையிலிருந்தும் கபடி அணியொன்று பங்கேற்கவுள்ளது. இந்த கபடி சுற்றுத்தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நடைபெறும். பங்களாதேஷ், இலங்கை, இங்கிலாந்து, கென்யா, நேபாளம், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்கவுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை:முடிவுக்கு கொண்டுவர எரிசக்தி அமைச்சர் நடவடிக்கை

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் எரிசக்தி காமினி லொக்குகே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் ,கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோல் மற்றும் டீசல் ஒரு பௌசர் வீதம் விநியோகிக்குமாறு அமைச்சர் காமினி லொக்குகே உத்தரவிட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலைக்கு அமைய … Read more

நீர் துண்டிப்பை தவிர்க்க, நிலுவைப பணத்தை செலுத்துமாறு அறிவிப்பு

கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் நீர் கட்டணப் பட்டியலைச் செலுத்ததாத சகல நுகர்வோரினதும் நீர்விநியோகத்தைத் துண்டிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காலத்தில் தொடர்ச்சியாக நீர்விநியோக வழங்கலினால் 7.5 பில்லியன் ரூபாவை பாவனையாளர்களிடமிருந்து அறவிட வேண்டியிருப்பதாக வடிகாலமைப்புச் சபையின் மேலதிக முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்தார். அந்த நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு பல முறை அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு பாவனையாளர்கள் பலர்  உரிய வகையில் பதிலளிக்க தவறிவிட்டனர். அதனடிப்படையிலேயே அவ்வாறனவர்களின் … Read more

கலாசார நிதியத்தின் நோக்கங்களுக்குப் புறம்பாக பணம் செலவழிக்கப்பட்டுள்ளது… இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கலாசார நிதியத்தின் நோக்கங்களுக்குப் புறம்பாக அந்த நிதியத்தின் பணத்தை பயன்படுத்தியதன் காரணமாக கலாசார நிதியத்தின் அடிப்படைப் பணிகளுக்கு நிதி இல்லை என தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். “ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான” ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் அண்மையில் தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர … Read more