ஜப்பானில் நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு

ஜப்பானின் வடக்கில் புகுஷிமா கடற்பகுதியில்  நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே நேற்று இரவு 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 60 கிலோமீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவைக்கொண்டதாக பதிவாகியுள்ளது நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள புல்லட் ரெயில்கள் தடம் புரண்டன. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் … Read more

இலங்கைக்காக எப்பொழுதும் முன் நிற்போம் – இந்தியப் பிரதமர் மோடி தெரிவிப்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா பயணமான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். இந்தியப் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று (16) மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. அயல் நாடான இலங்கைக்குத் தேவையான சகல விதமான உதவிகளையும் எந்தர்ச் சந்தர்ப்பத்திலும் வழங்குவதற்குத் தயார் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததுடன் இலங்கைக்காக எப்பொழுதும் முன்னிட்போம் என்றும் இதன் … Read more

ஹோமாகம மஹிந்த ராஜபக்க்ஷ கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரத்தின் கலசம் திறந்து வைப்பு

ஹோமாகம மஹிந்த ராஜபக்க்ஷ கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரத்தின் கலசம் திறந்து வைக்கும் நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று (16) கலந்து கொண்டார். வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களினால் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் கலசம் திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கௌரவ பிரதமர் புதிய தாதுகோபுரத்திற்கு முதலாவது மலர் பூஜை நடத்தினார். கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ சங்க சபையின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய இத்தேபானே தம்மாலங்கார மஹாநாயக்க தேரர், மல்வத்து விகாரை … Read more

16.03.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள்

16.03.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:  

ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை (16.03.2022)

ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை. (16.03.2022) அதி வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் அனுமதியுடன், ஏனைய மதத் தலைவர்களே, தாய்மார்களே, தந்தையர்களே, சகோதர சகோதரிகளே, அன்பான குழந்தைகளே மற்றும் நண்பர்களே இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற … Read more

இலங்கையில் இதுவரையில் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 78.86 வீதம்

கடந்த திங்கட்கிழமை (14) கொவிட் 19 தடுப்பூசி 25 ஆயிரத்து 14 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் இதுவரையில் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 78.86 வீதத்தை எட்டியுள்ளதுடன், இரண்டாவது டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை 66.33 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையின்படி, 20 வயதிற்கு மேற்ட்டவர்களில் 96 வீதமானோர் முதல் இரண்டு டோஸினையும், 51.94 சதவீதமானோர் மூன்றாவது டோஸினையும் பெற்றுள்ளனர். 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் 96.1 வீதமானோர் முதல் டோஸினையும் 82.1 வீதமானோர் 2 … Read more

இலங்கை பிரதிநிதிகளின் தர்க்கரீதியான விடயங்கள் மூலம் நாட்டுக்கு பாரிய வெற்றி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பிரதிநிதிகளின் குழு முன்வைத்த தர்க்கரீதியான விடயங்கள் மூலம் நாட்டுக்கு பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் அடிக்கடி பல்வேறு அறிக்கைகளை கோருவதன் மூலமான பயன்கள் என்ன? நாடு ஒன்றின் உள்ளக விடயங்களில் இந்த வகையில் அழுத்தங்களை மேற்கொள்வதன் நோக்கம் என்ன? அனைத்து நாடுகளையும் ஒரே மாதிரி கருதி இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்துவது போன்ற … Read more

நாட்டில் முதற்தடவையாக தயாரிக்கப்பட்ட சேலைன் போத்தல்கள் (Saline) சந்தைக்கு

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால், முதற்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சேலைன் (Saline) போத்தல்கள் நேற்று (15) உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு தேவையான சேலைன் (Saline) போத்தல்களில் 28 சதவீதம் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், எதிர் காலத்தில் நாட்டிற்கு தேவையான அனைத்து சேலைன் (Saline) போத்தல்களையும் நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைகள் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அத்துடன், வருடாந்தம் 26 மில்லியன் சேலைன் (Saline) … Read more