24.02.2022 ஆம் திகதி அறிக்கையிடப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை
24.02.2022 ஆம் திகதி அறிக்கையிடப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 30
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
24.02.2022 ஆம் திகதி அறிக்கையிடப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 30
புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகத்தின் ஊடாக அரசாங்கத்தின் திறைசேரிக்கு செலுத்தப்பட வேண்டிய உரிமைத்தொகை பல வருடங்களாக உரிய முறையில் பரிமாற்றம் செய்யப்படவில்லையென்றும், இதனை உரிய முறையில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழுவின் (கோப் குழு) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேரசிரியர் கௌரவ சரித ஹேரத் வலியுறுத்தினார். புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகம் 23.02.2022 அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதற்கமைய 2015 … Read more
உக்ரேனில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உக்ரேனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் இது தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள 24×7 அவசர தொலைபேசி இலக்கமான +90 534 456 94 98, நிலையான தொலைபேசி இலக்கமான +90 312 427 10 32 மற்றும் … Read more
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) திறந்து வைக்கப்பட்ட முதல் மாதத்தில், அரசாங்கம் 100 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். 15-01-2022 அன்று மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான இந்தப் பகுதி நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் முதல் 12 மணித்தியாலங்களுக்குள் பொதுமக்கள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. 16-01-2022 அன்று மதியம் 12.00 மணிக்குப் பிறகு நெடுஞ்சாலையில் பயணம் செய்ய கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது. 16.01.2022 முதல் … Read more
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் குறைவடைந்துவிடும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. 35 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதியை செலவிட்டு, விடுவிக்கப்பட்டுள்ள கப்பலில், 37 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசல் தரையிறக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் மேலும் ஒரு கப்பல் எரிபொருளுடன் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
வடக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈட்பட்டிருந்த இரண்டு ட்ரோலர் படகுகளை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர். அவற்றிலிருந்த 22 இந்திய மீனவர்களையும் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். காங்கேசந்துறை – கோவிலன் கடற்பிரதேசத்தில் வைத்து படகுகளை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர். இந்த மாதத்தில் மாத்திரம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈட்பட்ட எட்டு படகுகளில் சுமார் 51 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போரினை தொடங்கியுள்ளதால், தங்கம், மசகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது இந்திய பங்கு சந்தைகள் சரிவு கண்டுள்ளன. ஐ,நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுரைகளையும் மீறி உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா ஜனாதிபதி இன்று காலை உத்தரவிட்டார். இதையடுத்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கில் ரஷிய படைகள் குண்டுகளை வீசத் தொடங்கின. ஒடேசா, கார்க்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் ஏவுகணை மூலம் தாக்கி வருகிறது. உக்ரைன் மீது … Read more
உலக அளவில் மதிப்புமிக்க தலைவர் என்ற ரீதியில் இந்திய பிரதமர் மோடி என்பதால் அவரது பேச்சை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கேட்பார் என இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷ்ய எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் … Read more
சிரேஷ்ட ஊடகவியலாளரான பந்துல பத்மகுமார காலமானார். இவர் சிறுநீரக நோய் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவர் சுமார் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இறக்கும் பொழுது அவருக்கு 71 வயது. இவர் லேக்கவுஸ் நிறுவனத்தின் ஊடக பிரிவின் பணிப்பாளராகவும், தலைவராகவும் நீண்ட காலம் கடமையாற்றியுள்ளார். தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ‘முல் பிடுவ’ என்ற பத்திரிகை கண்ணோட்டம் என்ற நிகழ்ச்சியை நீண்ட காலம் நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக்கவின் இறுதி கிரியை எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பத்திரிகை ஊடகதுறையில் புரட்சியை ஏற்படுத்திய சிரேஸ்ட ஊடகவியலாளரான சுனில் மாதவ பிரேம திலக்க நேற்று மாலை காலமானார். இறக்கும் பொழுது அவருக்கு 78 வயது. 1944ல் பிறந்த இவர் பத்திரிகை துறைக்கு பாரிய பணியாற்றியுள்ளார். இவர் லேக்கவுஸ் நிறுவனத்தின் சிலுமின பத்திரிக்கையின் முன்னாள் பிரதம ஆசிரியரான பிரேம திலக்கவின் புதல்வராவார். பாடசாலை காலம் தொடக்கம் பத்திரிகையாளராக பணியாற்றும் எண்ணக்கருவுடன் செயற்பட்டு வந்த … Read more