பொருளாதர நிலைமாற்றம் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

பொருளாதர நிலைமாற்றம் சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன 2024.08.09 ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். பொருளாதர நிலைமாற்றம் தொடர்பான தேசிய கொள்கைக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு நோக்கமாகக் கொண்ட இந்த சட்டமூலம் 2024 மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து 2024 ஜூலை 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போது சட்டமூலம் வாக்கெடுப்பு இன்று திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய, இந்த சட்டமூலம் 2024 … Read more

இந்திய மீன்பிடி கப்பலில் சட்டவிரோதமாக வந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

வென்னப்புவ கரையோரப் பகுதியில் இலங்கைக் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், இந்திய மீன்பிடிக் கப்பல் மூலம் வென்னப்புவ தல்தெக (கடவத்தை) பகுதிக்கு சட்டவிரோதமாக வந்து இரகசியமாக தரையிறங்க முயற்சித்த இலங்கையர் ஒருவர் அண்மையில் (10) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, கடற்படை புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் பிரகாரம், வென்னப்புவ தல்தெக (கடவத்தை) பகுதியில் இந்திய மீன்பிடிக் கப்பல் மூலம் சட்டவிரோதமான முறையில் தரையிறங்க முற்பட்ட வேளையில் வென்னப்புவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இந்த நபர், போதைப்பொருள் கடத்தல் … Read more

சிறுபோக விவசாயத்தின் போதான பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை

சிறு போக விவசாயத்தின் பாதிப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை வழங்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி தற்போது சிறுபோகத்தின் போது விவசாயப் பாதிக்கப்புக்கள் பதிவு செய்யப்பட்ட பிரதேசங்களுக்கு அதற்கான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபைக்கு பணிப்புரை விடுத்தார். அதிகமான பிரதேசங்களில் இன்னும் விரைவில் அறுவடை இடம்பெறுவதாகவும், அறுவடை முடிந்ததும் உடனடியாக விவசாயப் பாதிப்பிற்கான கொடுப்பனவை வழங்குவதற்கு விவசாய மற்றும் … Read more

அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றி..

இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையில் நேற்று (11) இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி அயர்லாந்து மகளிர் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்ததுடன் அவர்கள் தமது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக இனோஷி பிரியதர்ஷினி 2 விக்கெட்டுகளையும், உதேஷிகா பிரபோதனி மற்றும் சுகந்திகா குமாரி … Read more

06 மாகாணங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை.. 

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஓகஸ்ட் 12ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு   2024 ஓகஸ்ட் 12ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.   நாட்டில்  அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை விருத்தியடைந்து வருகின்றது   நாட்டின் பல பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய … Read more

‘Gajaba Unity Festival – 2024’ மற்றும் வர்த்தக கண்காட்சி

இலங்கை இராணுவ கஜபா படையணி மற்றும் கஜபா படையணி முன்னாள் போர்வீரர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Gajaba Unity Festival – 2024, மற்றும் வர்த்தக கண்காட்சி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 01, 2024 வரை நீர்கொழும்பு கடோல்கெலே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு தொடர்பாக அறிவூட்டும் ஊடகவியலாளர் மாநாடு கஜபா முன்னாள் போர்வீரர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா (ஓய்வு), யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் … Read more

நாட்டில்  அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை.. 

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஓகஸ்ட் 11ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு   2024 ஓகஸ்ட் 10ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.   நாட்டில்  அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை விருத்தியடைந்து வருகின்றது   மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய … Read more

ஊடக தர்மம் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் – பிரதி தேர்தல் ஆணையளர்  

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் ஊடகதர்மம் சமூக ஊடகங்களுடனும் சம்பந்தப்படுவதாகவும், தேர்தல் காலப் பகுதியில் இந்நெறிமுறைகளுக்கு இணங்க சமூக ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் ஊடக நெறிமுறைகளை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதித் தேர்தல் ஆணையாளர் பியூமி ஆடிகல தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (9) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கருத்துக்களை வெளியிடும் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  சமூக ஊடகங்கள் … Read more

தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரித்த 1700 ரூபா சம்பளம் வழங்கப்படும்…

தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 1700 ரூபாய் சம்பளத்தை அவ்வாறே வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சபை தலைவர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த் பாராளுமன்றத்தில் (08) தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் செலுத்தப்படாமை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  27 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபை தலைவர் இதனைக் குறிப்பிட்டார். தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் தொடர்பான பிரச்சினை தற்போது சம்பள நிர்வாக சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் … Read more

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா – 2024

‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா – 2024’ நேற்று (09/08/2024) காலை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி வரை தினமும் காலை 10.00 மணிமுதல் மாலை 8.00 மணிவரை இந்த புத்தகக்கண்காட்சியும் விற்பனையும் நடைபெற உள்ளது. யாழ்ப்பாண தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் இருபதுக்கும் மேற்பட்ட புத்தக விற்பனை நிலையங்கள், வெளியீட்டகங்கள், புத்தகங்கள் சார் அமைப்புக்கள் பங்குபற்றுகின்றன. இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பலவேறு நாடுகளில் இருந்தும் வெளிவரும் … Read more