என்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம்: பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இரண்டாம் கட்ட இழப்பீடு

கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி தீ பரவலுக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இரண்டாம் கட்ட நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக , 1.75 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்வரும் வாரம் தொடக்கம் நட்டஈடாக வழங்கப்படவுள்ளதாக அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி  இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்ட வலயங்களாக பெயரிடப்பட்ட … Read more

சாரதி பயிற்சி ஆலோசகர்கள், உதவி சாரதி பயிற்சி ஆலோசகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலம் பரீட்சை  

சாரதி பயிற்சி ஆலோசகர்கள் மற்றும் உதவி சாரதி பயிற்சி ஆலோசகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலப் பரீட்சை  

பொருளாதாரக் கொள்கைகள், திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் வகையில்  பிரதமர் அதிகாரிகளுடன் சந்திப்பு

தேசிய மற்றும் துறைசார் கொள்கைகளை வகுப்பதில் உதவி, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 18 ஆம் திகதி அமைச்சிற்கு விஜயம் செய்து அதிகாரிகளுடன் அமைச்சின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். நாட்டின் வளர்ச்சியை மேலும் வினைத்திறனாக்க அனைவரும் திறம்பட திட்டமிட்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், திணைக்கள மற்றும் நிறுவன தலைவர்களிடம் ஒவ்வொரு திட்டத்தினதும் … Read more

மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் 2ஆவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

முந்தைய மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை, உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் அவர்களால், 18.02.2022 அன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் அதுபோன்ற கடுமையான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது ஏனைய குழுக்கள் கண்டறிந்த தகவல்கள் தொடர்பான விசாரணைகள், … Read more

நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி விஜயம் “இலக்கு வைத்த திட்டங்களைச் செயற்படுத்தும் போது தேசிய தேவைகளை மட்டும் கருத்திற்கொள்ளவும்” “சரியானதைச் செய்ய சட்டத்தில் தடையில்லை…” அதிகாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

இலக்கு வைக்கப்பட்ட திட்டங்களைச் செயற்படுத்தும் போது, தேசிய தேவையை மாத்திரம் கவனத்திற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், எதிர்காலத்துக்காகத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தாமதமாவதால், உலகத்தின் முன் நமது நாடு பல வருடங்களுக்கான பின்னடைவைச் சந்திக்குமென்றும் எடுத்துரைத்தார். கொழும்பு 07, ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபைக்கு 18.02.2022 அன்று திடீர் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், அங்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். 2007ஆம் ஆண்டு 35ஆம் இலக்க இலங்கை நிலைபெறுதகு வலுச்சக்தி … Read more

உயர்தரப் பரீட்சையில் குறைந்த எண்ணிக்கையிலான மோசடிகள்

தற்போது நடைபெறும் 2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இதுவரையிலும் குறைந்த எண்ணிக்கையிலான மோசடி சம்பவங்களே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இதுவரை இரண்டு சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட வினாத்தாள் விநியோகம் மற்றும் நேரக் கணிப்பீடு என்பன புதிய தொழில்நுட்ப முறையின் கீழ் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு … Read more

விரிவான தேசிய கடல்சார் இடர் தயார்படுத்தல் பொறிமுறையை உருவாக்குவதில் இலங்கைக்கு அவுஸ்திரேலியா உதவி

சிறந்த சர்வதேச நடைமுறைகள், இலக்கை நோக்கி பணியாற்றுவதற்காக கணினி பொறியியல் மாதிரியின் பயன்பாடு, முழுமையான மற்றும் நவீன கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவுவதற்கான இலங்கையின் குறிக்கோள் மற்றும் தேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து, வெளிநாட்டு அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு அண்மையில் பல்வேறு பங்குதாரர்கள் கலந்து கொண்ட சந்திப்பொன்றை நடாத்தியது. பாரிய அளவிலான அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள், இரசாயணங்கள் மற்றும் … Read more

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களுக்கு தேவைக்கேற்ப கொவிட் தடுப்பூசி

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப கொவிட் தடுப்பூசி டோஸ்கள் பெற வேண்டும் எனின், அவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  இதன்படி, இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அதற்கான வசதிகளை செய்து கொடுக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை, வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், … Read more