இந்திய மேற்கு பிராந்திய கடற்படை கப்பல்களின் இலங்கைக்கு….

நட்புறவு பாலங்களை கட்டியெழுப்புவதற்கான இந்திய கடற்படையின் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இந்திய மேற்கு பிராந்திய கடற்படையின் நான்கு கப்பல்கள் மேற்கு பிராந்திய கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா அவர்களின் கட்டளையின் கீழ் 2022 மார்ச் மாதம் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தன. சுதேசிய முறைப்படி அமைக்கப்பட்ட ஏவுகணைக் கப்பலான பிரம்மபுத்ரா,  தல்வார் கப்பல் சகிதம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்த நிலையில் சுதேசிய முறையிலான நாசகாரியான ஐஎன்எஸ்.சென்னை மற்றும் … Read more

அடுத்த 6 ஆண்டுகளுக்குள் 5,000 மெகா வோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக மின் உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க ஜனாதிபதி பணிப்புரை

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி அளித்துள்ளது என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ எதிர்வரும் 6 வருடங்களுக்குள் 5,000 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்புடன் சேர்க்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் .ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதானி இந்தியா நிறுவனம் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க … Read more

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் இந்திய யாத்திரிகர்கள் பங்கேற்பு

2022 மார்ச் 11 – 12 ஆகிய திகதிகளில் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் குறிப்பாக மீனவர்கள் மற்றும் பாதிரியார்கள் உள்ளடங்கலாக கிட்டத்தட்ட 100 இந்திய யாத்திரிகர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, சமஎண்ணிக்கையிலான இலங்கை யாத்திரிகர்களும் இத்திருவிழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சூல் ஜெனரல் ராகேஷ் நட்ராஜ் மற்றும் கொன்சுலேட் ஜெனரல் காரியாலயத்தின் ஏனைய அதிகாரிகள் விசேட விருந்தினர்களாக இத்திருவிழாவில் கலந்துகொண்டிருந்தனர். 2.    இத்தீவிற்கு வருகை தந்திருந்த யாத்திரிகர்களை … Read more

ஹிந்தி மொழி கற்க விரும்பும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள்

இந்தியாவிற்கு சென்று ஹிந்தி மொழி கற்க விரும்பும் மாணவர்களுக்காக புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இந்திய அரசாங்கத்தின் மனிதவள அபிவிருத்தி அமைச்சு புலமைப் பரிசில் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் தெரிவு செய்யப்படும் மாணவர்கள், ஆக்ராவில் உள்ள கேந்த்ரீய ஹிந்தி சன்ஸ்தான் என்ற நிறுவனத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் ஹிந்தி கற்கை நெறியைத் தொடரலாம். ஜீசீஈ உயர்தரப் பரீட்சையில் ஹிந்தி மொழியை ஒரு பாடமாகவோ, இலங்கையின் பல்கலைக்கழகமொன்று நடத்திய ஏதோவொரு ஹிந்தி கற்கைநெறியையோ படித்தவர்கள் புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் … Read more

சீனாவில் மீண்டும் 'கொரோனா' அதிகரிப்பு

சீனாவில் அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு காரணமாக அங்கு பல்வேறு மாகாணங்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து … Read more

நாளை பஸ் கட்டணங்கள் மறுசீரமைப்பு  

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தவிர்க்கமுடியாது எனவும் நாளை அமைச்சரவையில் இதுகுறித்து ஆராய்ந்த  பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். நிதியமைச்சர், பஸ் உரிமையாளர்களின் சங்கத்துடன் இதுதொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியிருப்பதாக போக்குவரத்து  அமைச்சர்  தெரிவித்துள்ளார். தனியார் பஸ்களுக்காக எரிபொருள் நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் ஆராய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும். எனினும், அது நடைமுறைச்சாத்தியம் அல்லாத விடயம் என்று கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, புதிய பஸ்கட்டண மறுசீரமைப்புத் தொடர்பில் பொருத்தமான நடைமுறைகள் குறித்து பஸ் சங்க உரிமையாளர்களும் தமது … Read more

2021 தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறு

சமீபத்தில் நடைபெற்ற 2021 தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறு வெளியடப்பட்டிருப்பதாக பரீட்சைத் திணைக்களம் இன்று சற்று முன்னர் அறிவித்துள்ளது.  3,40,508 மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர். இதில் 85,440 மாணவர்கள் தமிழ் மொழியில் பரீட்சையில் தோற்றியுள்ளனர்.

முன்னோக்கிய பொருளாதாரப் பாதைக்கான அமைச்சரவை உபகுழுக்களின் கலந்துரையாடல்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தலைமையில் ஆரம்பம்

சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்துடன் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக கடந்த மாதம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சரவை உபகுழுக்கள் 2022 மார்ச் 9 மற்றும் 10ஆந் திகதிகளில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் முதன்முறையாகக் கூடின. பணிகளை ஆரம்பிக்கும் முகமாக, உபகுழுக்களின் உறுப்பினர்களாக செயற்படும் அமைச்சர்களான பந்துல குணவர்தன, நாமல் ராஜபக்ஷ, அலி சப்ரி, ரமேஷ் பத்திரன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் பங்கேற்புடன் அமைச்சரவை உபகுழுக்களின் … Read more