219ஆவது 'அமாதம் சிசிலச' நிகழ்வில் கௌரவ பிரதமர் பங்கேற்றார்

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேசத் தொடரின் 219ஆவது தர்ம உபதேசம் இன்று (2022.29.16) அலரி மாளிகையில் நடைபெற்றது. வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து கௌரவ பிரதமர் தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்த மஹவ, இபலோகம ஸ்ரீ போதிருக்காராமதிகாரி, இலங்கையின் பௌத்த மறறும் பாலி பல்கலைக்கழகத்தின் முதுகலை கற்கைநெறி பீட பீடாதிபதி பேராசிரியர் வணக்கத்திற்குரிய மொரகொல்லாகம உபரதன தேரரை வரவேற்றார். பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் … Read more

2022ஆம் வருடத்தின் முதலாவது சட்டத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று முன்தினம் (14) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கடந்த 08ஆம் திகதி இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், திருத்தங்களுடன் இது நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன் ஊடாக 1981ஆம் ஆண்டு 66ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் எனப் பெயர் மாற்றம் … Read more

இலங்கை அபிவிருத்தி முறிகளின் நேரடி வழங்கல் ஊடாக திரட்டப்பட்ட நிதியங்கள்

இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைகளின் செயல்திறன்வாய்ந்த தன்மையினை உறுதிப்படுத்தும் விதத்தில் 2022 சனவரி 01 தொடக்கம் 2022 பெப்புருவரி 15 வரை இலங்கை அபிவிருத்தி முறிகளின் நேரடி வழங்கல் வாயிலாக ஐ.அ.டொலர் 111.5 மில்லியன் கொண்ட தொகையுடைய நிதியங்கள் திரட்டப்பட்டுள்ளன. மேற்குறித்த காலப்பகுதியின் போது இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகள், மூன்று மாதங்களிலிருந்து ஐந்து வருடங்களைக் கொண்ட வீச்சுடைய முதிர்ச்சிப் பரம்பலில் காணப்பட்டு, பாரியளவிலான … Read more

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 சனவரி

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2021 திசெம்பருடன் ஒப்பிடுகையில் 0.6 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் 2022 சனவரியில் 58.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. மாதகாலப்பகுதியில் தொழில்நிலையில் மீட்சியுடன் ஒன்றிணைந்து புதிய கட்டளைகள், உற்பத்தி என்பவற்றில் பதிவாகிய மேம்பாடுகள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், மாதத்திற்கு மாதம் அடிப்படையில் கொள்வனவுகளின் இருப்பு அதிகரித்த அதேவேளை நிரம்பலர்களின் விநியோக நேரம் நீட்சியடைந்தது. பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, 57.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து 2022 இன் தொடக்கத்தில் பணிகள் துறையில் … Read more

ஜனாதிபதி தலைமையில் அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் தேசிய மாநாடு…

அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 9ஆவது தேசிய மாநாடு, இன்று (16) பிற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையில், கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்க்ஷ மண்டபத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கமானது (APLA), இலங்கை முழுவதும் வியாபித்திருக்கின்ற பிரத்தியேக வகுப்புகளின் ஆசியர்கள் ஒன்றிணைந்து, 2004ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தொழில்சார் நிபுணர்கள், அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 3,500 பேரை … Read more

நீதி, வெளிவிவகாரம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்களை “ஒரே நாடு – ஒரே சட்டம்” செயலணி சந்தித்தது…

“ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற எண்ணக்கருவை அடைவதற்காக, ஜனாதிபதிச் செயலணியினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்படவுள்ள யோசனைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் கவனத்திற்கொண்டு, ஜனாதிபதி அவர்களின் நோக்கத்தை அடைவதற்கு தங்களாலான ஒத்துழைப்புகளை வழங்குவதாக, அமைச்சர்கள் தெரிவித்தனர். “ஒரே நாடு – ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதிச் செயலணியினர், நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரை கடந்த சில தினங்களில் … Read more

தேசிய கைத்தொழில் வல்லுநர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து விருது…

“நாட்டுக்கு புத்துயிர் அளிக்கும் தொழிற்றுறை மறுமலர்ச்சி” என்ற தொனிப்பொருளில், கைத்தொழில் துறைசார் வல்லுநர்களைக் கௌரவிக்கும் தேசிய கைத்தொழில் சிறப்பு விருது விழா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையில், நேற்று (15) பிற்பகல், பத்தரமுல்ல வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்றது. சிறப்புமிக்க சிறு, நடுத்தர மற்றும் பாரிய கைத்தொழில் உற்பத்திகள் மற்றும் சிறப்புமிக்க இயந்திர உற்பத்திகள் போன்ற துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த விருது விழாவின் போது ஜனாதிபதி அவர்களினால் பிளாட்டினம் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். பாரிய, … Read more

நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை வரவேற்கின்றோம் – அமைச்சர் உதய கம்மன்பில

நெருக்கடியான சூழ்நிலையின் போது இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை வரவேற்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், இந்திய எரிபொருள் நிறுவனத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல், கொழும்பை நேற்று (15) வந்தடைந்தது. கப்பலை வரவேற்க எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சென்றிருந்த போதே அமைச்சர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் மத்தியில் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் … Read more

வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 பெப்ரவரி 16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று?

ஓமிக்ரோன் வைரசு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் அடையாளம் காணப்படுகின்ற அனைத்து கொவிட் தொற்றாளர்களும் ஒமிக்ரோன் வைரஸ் வகை திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் தொற்று குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோய் என்பது தவறான கருத்தாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான நோய் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். … Read more