விபத்துக்களின் போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பு
தொழிலாளர் இழப்பீட்டுத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நேற்று (10) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றிய தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நபர் ஒருவர் பணியில் ஈடுபடும்போது, விபத்துக்குள்ளானால், வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை ஐந்து இலட்சம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். தனியார் துறையில் ஊழியர் சேவைக்கு வரும்போதோ, பணியிலிருந்து திரும்பும்போதோ விபத்துக்குள்ளானால், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், இந்த இழப்பீட்டு திருத்தச் சட்டமூலத்தில் அவர்களுக்கும் இழப்பீடு … Read more