குவைத் நிதியத்தில் இருந்து மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கான கடன் ஒப்பந்தம் கொழும்பில் வைத்து கைச்சாத்து

அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் நெதல் ஏ. அல்-ஒலாயன் தலைமையிலான குழுவினர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கும் அவற்றைச் சித்தப்படுத்துவதற்குமான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தனர். கிழக்கு, தெற்காசிய மற்றும் பசுபிக் நாடுகளுக்கான நடவடிக்கைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் யூசுப் அல்-படரை உள்ளடக்கிய விஜயம் செய்திருந்த குழுவினர், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இலங்கையின் கல்வி அமைச்சர் … Read more

மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கிடையில் நேரடி விமான சேவை

மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கிடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. உஸ்பெகிஸ்தான் விமான சேவைக்கு சொந்தமான UZB 3525 என்ற விமானம் 135 சுற்றுலா பயணிகளுடன் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது. குளிர்பருவ காலத்தில் இலங்கையை இலக்காகக் கொண்டு இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் , வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரச்சினைகளை தீர்க்குமாறு கௌரவ பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

அகில இலங்கை சாசனாரக்ஷக சபையில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று முன்தினம் (10) பிற்பகல் பிரதமரின் செயலாளர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அலரி மாளிகையில் நடைபெற்ற அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு கௌரவ பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார். நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக … Read more

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் குறித்து இன்று (11) பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமர் ஆற்றிய இரங்கல் உரை

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் குறித்து இன்று (11) பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமர் ஆற்றிய இரங்கல் உரை இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம். மங்கள சமரவீர கொழும்பு றோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், லண்டனில் உள்ள புனித மார்ட்டின் உயர்கல்வி நிறுவனத்தில் தனது முதல் பட்டத்தையும் முடித்த பின்னர் 1983 இல் இலங்கை திரும்பினார். மங்கள சமரவீர 1988 இல் மாத்தறை தொகுதிக்கு … Read more

கிரான் பாலத்தில் இருந்து குடும்பி மலை வரையான பிரதான வீதிக்கு 1,454 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் காப்பட் இடும் பணிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சுமார் 40 வருடகாலத்திற்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்பட்ட கிரான் புலிபாய்ந்த கல் வீதி தொடக்கம் குடும்பிமலை வரையான சுமார் 38 கிலோமீற்றர் வரையான வீதிக்கான காபட் இடும் வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்று (10) காலை கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் ஒரு இலட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை … Read more

பல இடங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 பெப்ரவரி 11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் … Read more

ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யூரி மேட்டேரி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை நேற்று (பெப்ரவரி, 09) சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் இடம் பெற்றது. பாதுகாப்பு தலைமையகத்திற்கு வருகை ரஷ்ய தூதுவர் தலைமையிலான தூதுக்குழுவினரை பாதுகாப்பு செயலாளர் வரவேற்றதுடன் தொடர்ந்து இடம்பெற்ற சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மற்றும் இராணுவ இராஜதந்திர விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த இரு தரப்பு … Read more

உலகளவில் கொரோனா பாதிப்பு – 40 கோடியாக அதிகரிப்பு

உலகளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 40.37 கோடியை கடந்துள்ளது.. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 37 இலட்சத்து 405 ஆக … Read more

கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் வர்த்தகத்துறைக்கான ஆலோசகர் மட்டக்களப்பு விஜயம்

மட்டக்களப்புக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் வர்த்தகத்துறைக்கான ஆலோசகர் டேனியல் வூட் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பொருளாதார சமூகம் சர்ந்த பல விடயங்கள் விரிவாக ஆரயப்பட்டதுடன் எதிர்காலத்தில் கனேடிய அரசாங்கத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.