சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு ஆரையம்பதியில் விழிப்புணர்வு நடைபவனி

சர்வதேச மகளிர் தினத்தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளீர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானத்தி தலைமையில் விழிப்புணர்வு நடைபவனி இன்று (08) திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. “நிலைபேறான நாளைக்காக இன்றைய பால்நிலை சமத்துவம்” எனும் இவ்வாண்டிற்கான தொனிப்பொருளிற்கு அமைய காலை 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பு ஆயுள்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி “பெண்களின் தலைமைத்துவத்தின் ஊடாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு நஞ்சற்ற உணவினை உற்பத்திசெய்வோம்” எனும் தொனிப்பொருளிற்கு அமைய … Read more

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) முதலாவது அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் சரித ஹேரத் அவர்களினால் இன்று (08) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் அழைக்கப்பட்ட மற்றும் அதன் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 12 அரசாங்க நிறுவனங்கள் குறித்தே இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு, இலங்கை பெற்றோலிய … Read more

பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவு பாராளுமன்றத்தில் அங்குரார்ப்பணம்

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (08) பாராளுமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் நூலகத்தில் நிறுவப்பட்டுள்ள பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவு, பாராளுமன்ற வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் உட்பட பல புத்தகங்கள் மற்றும் பெண்கள் ஆய்வுகள் பற்றிய ஆவணங்களையும் கொண்டுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவை நம் நாட்டில் நீண்டகாலமாக உணரப்பட்டுவரும் விடயங்கள் விடயங்கள் என்றும், … Read more

இலங்கை தேயிலை விலையில் சாதனை

பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தேயிலை ஏலத்தில் இலங்கை தேயிலை விலை 725 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் “சிலோன் தேயிலை ” கொள்வனவாளர்களில் இரண்டாவது பெரிய நாடக ரஷ்யா திகழ்ந்தது.இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக உலகளவில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பை தளமாக கொண்ட தரகு நிறுவனம் போர்ப்ஸ் அண்ட் வால்கெர் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொண்ட பொருளாதார தடைகளால் ரஷ்ய ரூபிள் நாணயம் … Read more

நாட்டின் சனத்தொகையில் 78.7 வீதமானவர்களுக்கு முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசி

கடந்த சனிக்கிழமை வரையில் நாட்டின் சனத்தொகையில் 78.7 வீதமானவர்களுக்கு முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 4 ஆம் திகதி தரவின்படி மொத்த சனத்தொகையில் 64.04 வீதமானவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக நோயியல் பிரிவு அறிக்கை தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் 1 கோடியே 69 இலட்சத்து 21 ஆயிரத்து 171 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது . இரண்டாவது … Read more

“ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி, சபாநாயகர் ,பாராளுமன்ற பொதுச் செயலாளரை சந்தித்தது…  

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோரை நேற்று (07) பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்தது. செயலணியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் எண்ணக்கரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக செயலணியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். இன மற்றும் மத குழுக்களாக, எந்தவொரு வகையிலும் … Read more

உலகளவில் கொரோனா தொற்றினால் 44.81 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 44.81 கோடியை கடந்துள்ளது. சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 கோடியே 81 இலட்சத்து 75 ஆயிரத்து … Read more

இலங்கையின் வணிகப் பிரதிநிதிகள் குழுவிற்கும் மொஸ்கோ வர்த்தக, தொழில்துறை சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பை மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு

இலங்கை வணிகக் குழுவிற்கும் மொஸ்கோ வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்திற்கும் இடையே ரஷ்ய வர்த்தக சமூகத்துடனான சந்திப்பொன்றை மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 பிப்ரவரி 09ஆந் திகதி ஒரு ஏற்பாடு செய்தது. மொஸ்கோ வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் தலைவர் விளாடிமிர் பிளாட்டோனோவ் தொடக்க உரையை நிகழ்த்தினார். பங்கேற்பாளர்களை வரவேற்ற அவர், தொழில்முனைவோர்களிடையே நேரடி உரையாடலை உருவாக்குவதற்கான வாய்ப்பை உருவாக்க நேரில் சந்திப்பது முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்டார். இலங்கையில் இருந்து வந்த தூதுக்குழுவினரின் விஜயத்திற்கு நன்றி தெரிவித்த … Read more

மகளிர் தினத்தை முன்னிட்டு மேலும் பத்துப் பாடசாலைகள் தேசிய பாடசாலைள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்துப் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன. சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.