வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்

வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: வாழ்த்துச் செய்தி – 2022 மார்ச் 08 ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும் பாட்டியாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தும் துணிச்சலான பெண்களின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். … Read more

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை கொள்முதல்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சளினை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் இன்று (07) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் தங்காலை பழைய சந்தை வளாகத்தில் ஆரம்பமானது. கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு கிலோ கிராம் மஞ்சளினை ரூ.165 … Read more

இந்நாட்டின் மிகப்பெரிய சீமெந்துத் தொழிற்சாலையின் உற்பத்தி ஆரம்பம்…மாகம்புரவுக்கு புதிய உருக்குத் தொழிற்சாலை …

மாகம்புர லங்கா கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலையான “லங்வா சங்ஸ்தா சிமென்ட் கோப்பரேஷன் (பிரைவெட்) லிமிடெட்” நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் மற்றும் பிரதமர் அவர்கள் நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய உருக்குத் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர். 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் புதிய உருக்கு ஆலைக்கான … Read more

ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியர்களுக்கும் கௌரவ பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியர்களுக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) பிற்பகல் தங்காலை தனியார் ஹோட்டலொன்றில் இடம்பெற்றது. இதன்போது ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து வைத்தியர்கள் கௌரவ பிரதமருக்கு தெளிவுபடுத்தினர. தங்காலை வைத்தியசாலையை மத்திய அரசுக்கு கையகப்படுத்தும் நடவடிக்கையை முறையான மற்றும் விரைவான வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவது குறித்து இதன்போது கௌரவ பிரதமர் கவனம் செலுத்தினார். குறித்த சந்திப்பில் கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ, மாவட்ட சுகாதார சேவைகள் … Read more

பாரியளவிலான பேரண்டபொருளாதார உறுதிப்பாட்டுக்கு ஆதரவளிப்பதற்கான கொள்கைசார்ந்த திட்டம் : செலாவணி வீதத்தில் நெகிழ்ச்சித்தன்மையை அனுமதித்தல்

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்றினை 2022 மார்ச்சு 04 இல் அறிவித்திருந்தது. தோற்றம்பெற்றுவரும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளை உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியில் உன்னிப்பாக கண்காணிக்கும் என்பதுடன் பணவீக்கம், வெளிநாட்டுத் துறை மற்றும் நிதியியல் துறை மற்றும் உண்மைப் பொருளாதார நடவடிக்கையில் உறுதிப்பாட்டினை அடையும் இலக்குடன் பொருத்தமானவாறு மேலதிக வழிமுறைகளை மேற்கொள்வதற்குத் … Read more

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்08ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022மார்ச் 07ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் ,சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் புதிதாக நியமனம் பெற்ற விரிவுரையாளர்களுக்கு பயிற்சி பட்டறை

புதிதாக நியமனம் பெற்ற விரிவுரையாளர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கான பயிற்சி பட்டறை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (07) பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது. ஊழியர்கள் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஏ. ஜெஃபர் ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பயிற்சி பட்டறையின் வளவாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டு விரிவுரை நிகழ்த்தினார். இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய விரிவுரையாளர்கள் பணி தொடர்பான, புதிய நோக்கம் , தேவையும் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது … Read more

உலக வங்கியின் உதவியுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்

உலக வங்கியின் உதவியுடன் முழு நாட்டையும் உள்ளடக்கிய 3000 கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் (ICDP) இரத்தினபுரி மாவட்டத்தில் பல வீதிகளின் அபிவிருத்தித் திட்டங்கள் ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. அதன்படி, கும்பகொட ஆரா சந்தியிலிருந்து கடதாசிச் தொழிற்சாலை தொழிற்சாலை – தலாவ வீதி (4.15 கி.மீ.), கலகெடி ஆரா – நுகே குறுக்கு வீதி (1 கி.மீ.), ஹிங்குர ஆரா … Read more