கடந்த 26ஆம் திகதிக்குப் பின்னர் ஆசிரியர் சேவைக்கு எவ்வித ஆட்சேர்ப்பும் இடம்பெறவில்லை – கல்வி அமைச்சர் 

தேர்தல் ஆணையளர் கடந்த 26 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட பின்னர் எவ்வித ஆசிரியர் ஆட்சேர்ப்புகளும் இடம்பெறவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.  அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசர் நிலையைக் கட்டளை  27(02) இன் கீழ் முன்வைத்த கேள்விக்கு பதில் அளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர், அரசாங்கம் பொருளாதார சவால்களுக்கு … Read more

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா…

வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம்  நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நேற்று (09) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்று காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. 18 ஆம் திகதி மஞ்சமும் 31 ஆம் திகதி சப்பரமும் செப்டம்பர் 1 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் செப்டம்பர் 2 ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும். செப்டம்பர் 3 ஆம் திகதி பூங்காவனமும் செப்டம்பர் … Read more

வடக்கில் அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு – வடக்கு மாகாண ஆளுநர் 

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை ஸ்தாபிக்குமாறு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம்  நடைபெற்ற போதே  ஆளுநர் இவ்வாறு தெரிவித்துளார்.   அவசர சிகிச்சை பிரிவிற்கான ஆளணியை நியமித்து உரிய பயிற்சிகளை வழங்குமாறும் ஆலோசனை வழங்கினார்.   அத்துடன் வைத்தியசாலைகளை ஒருங்கிணைப்பதற்கான தரவுப் பொறிமுறை ஒன்றை விரைவில் … Read more

எசல பெரஹெர முன்னிட்டு விசேட பஸ் சேவை

கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை பகல் இரவு சேவையாக விசேட பஸ் சேவையொன்றை நடாத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடு செய்துள்ளது.  இதன்படி கண்டி மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் 438 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் குறைவடையும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்…

பொது மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கும் நோக்கில், இலங்கை சதொச நிறுவனமானது, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைபானது நேற்று (09) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.   அதற்கமைய, ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 249 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கீரி சம்பா 248 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட) 230 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெள்ளை கெளப்பி … Read more

வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தேர்தல் குழுவின் பொறுப்பு

வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்கினைப் பயன்படுத்துவதற்குத் தேவையான இடத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட விடயங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09) இடம்பெற்ற விழிப்புணர்வு செயலமர்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.     தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என்ற கேள்வி முக்கியமானது அல்ல ஆனால் வாக்காளர் யார் என்ற கேள்வி தேர்தல் ஆணைக்குழுவுக்கு முக்கியமானது … Read more

கண்டி எசல பெரஹெர இன்று ஆரம்பம்

கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹரா திருவிழாவின் முதலாவது கும்பல் பெரஹெர இன்று (10) ஆரம்பமாகவுள்ளது.  கும்பல் பெரஹர எதிர்வரும் 14ம் திகதி வரை வீதி உலா வர உள்ளது.  முதலாவது ரந்தோலி பெரஹெர ஆகஸ்ட் (15) அன்று ஆரம்பமாகவுள்ளது.  அன்றைய தினம் முதல் 5 நாட்களுக்கு பெரஹெர நிகழ்வுகள் இடம்பெறும். கடைசி பிரமாண்ட ஊர்வலம், 19ஆம் திகதி நடைபெறும்.     •

மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 10ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, … Read more

ஜனாதிபதி தேர்தலுக்காக வைப்புப் பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 27 வரை அதிகரிப்பு..

2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக 2024.08.09ஆம் தகதி வரை வைப்புப் பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 27 வரை அதிகரித்துள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கம்பஹாவில் 12 மணித்தியல நீர் வெட்டு

கம்பஹாவிமின்சாச சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (11) 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (11) 12   மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. பேலியகொடை  நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜா எல, கட்டுநாயக்க, சீதுவை பிரதேச … Read more