லங்கா சதொச மூலம் 998 ரூபாவிற்கு புதிய நிவாரண பொதி

லங்கா சதொச ஊடாக ஐந்து உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று 998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக அவர் கூறினார். வர்த்தக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார். இந்த நிவாரண பொதியில் 5 கிலோகிராம் நாட்டரிசி, 400 கிராம் நூடில்ஸ், 100 கிராம் நெத்திலி, 100 கிராம் தேயிலை மற்றும் 100 கிராம் மஞ்சள் ஆகியன … Read more

பெரும்போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு

பெரும்போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு செலுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம்; அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பெரும்போக உற்பத்தியில் ; முப்பது வீதமான பயிர்ச் செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதேவேளை, கடந்த சில தினங்களில் அரசாங்கம் 50 லட்சம் கிலோ நெல்லைக் கொள்வனவு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் கௌரவிப்பு…

74ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போராடிய தேசியத் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர். தேசத்தந்தை டீ.எஸ்.சேனாநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல உள்ளிட்ட, தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பத்து தலைவர்களின் உருவச் சிலைகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களது தலைமையில், ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இன்று (04) முற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தன. ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சிசிர … Read more