இலங்கை பத்திரிகை பேரவையின் ஊடக ஆய்வின் 4 ஆவது வெளியீடு

இலங்கை பத்திரிகை பேரவை வெளியிட்டுள்ள ஊடக ஆய்வின் 4 ஆவது வெளியீடு நேற்று இடம்பெற்றது. வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது. “சமூக ஊடகங்களின் உயர்வு”என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. முன்னணி ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாசவின் நினைவாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 71 இலட்சம் ஆகும். இதேபோன்று உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4.8 பில்லியன் … Read more

மத்திய கலாசார நிதியத்தின் வரைவு விதிகள் கௌரவ பிரதமரிடம் கையளிப்பு

1980 ஆம் ஆண்டு 57 ஆம் இலக்க மத்திய கலாசார நிதியச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள வரைவு விதிகள் குழுவின் தலைவர் ஜி.எல்.டபிள்யூ.சமரசிங்க அவர்கள் உள்ளிட்ட குழு உறுப்பினர்களினால் நேற்று (02) அலரிமாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் 2020 செப்டெம்பர் 16 ஆம் திகதி குறித்த … Read more

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 26 சதவீதமாக அதிகரிப்பு

இலங்கையில் கடந்த வருடம் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் ஊடாக ஏற்றுமதி 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தென்னையுடன் தொடர்புடைய உற்பத்திகளான தேங்காய் உள்ளீடுகள் , தென்னை நார் உற்றபத்திகள், தென்னை மட்டைகள் உற்பத்திகள் மூலம் 661 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்ததாக இலங்கை சுங்க திணைக்களத்தின் நேற்றைய தின (02) அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. உலக அளவில் உள்ளூர் … Read more

44 கோடி பேரை பாதித்த கொரோனா வைரஸ்

தற்போது உலகம் முழுவதும் 44 கோடி பேருக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 கோடியே 6 … Read more

உக்ரைனில் இருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம் – ஐ.நா

ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், உக்ரைனில் இருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக உக்ரைன் நாட்டு மக்கள் அண்டைய நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதேவேளை ,ஒரு வாரத்திற்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் 40 இலட்சம் அல்லது 40 இலட்சத்துக்கு அதிகமான … Read more

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும்… ஜனாதிபதி பணிப்புரை

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இந்தப் பணிப்புரையை விடுத்தார். மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகளின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர், தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்தல், கையிருப்பை தொடர்ச்சியாகப் பேணல் மற்றும் மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை … Read more

மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை:விவசாயிகளுக்கு விசேட திட்டத்தில் எரிபொருள்

மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெற்செய்கை அறுவடை இடம்பெற்று வருகின்றது. நெல் அறுவடை செய்பவர்களுக்கு எரிபொருளை வழங்க விசேட நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டிசல் மற்றும் ஏனைய எரிபொருட்களை, அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நெல் அறுவடை செய்பவர்களுக்கு என மன்னார் மாவட்டத்தில் எரிபொருளை வழங்க விசேட நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. … Read more

 ஆடை தயாரிப்பு ஏற்றுமதி மூலம்  ஜனவரி மாதத்தில் 488 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

இலங்கையின் ஆடை தயாரிப்பு ஏற்றுமதி மூலம்  5 வருடங்களிலும் பார்க்க 488 மில்லியன் அமெரிக்க டொலராக உச்ச தொகையினை பதிவு செய்துள்ளது. கொரோனாவின் அதீத தொற்று காலங்களிலும் கொரோனா தடுப்பூசி மற்றும் முறையான பாதுகாப்பு நடவடிக்கை இத்துறை வளர்ச்சிக்கு பெருமளவு உதவியாக அமைந்துள்ளதாக இலங்கையின் ஒன்றிணைந்த ஆடை சங்க அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் ஆடை தொழில் துறையில் உள்ள ஊழியர்களில் 65% பேருக்கு வைரசு தொற்று தடுப்பூசி பூஸ்டர் டோஸ் வழங்கப்படுள்ளதுடன் 95% பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. … Read more

இலங்கைக்கு டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று

டீசலுடனான கப்பல் ஒன்று, இன்று (02.03.2022) இலங்கைக்கு வர உள்ளது. இதற்கு செலுத்த வேண்டிய டொலர்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். மேலும், மற்றுமொரு டீசல் கப்பலுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, இரண்டு கப்பல்களுக்கும் சுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த டீசல் கப்பல்கள் கிடைத்தவுடன், தற்போது நிலவுகின்ற டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உயர்மட்ட இருதரப்பு சந்திப்புக்களில் பங்கேற்பு  

2022 பெப்ரவரி 28ஆந் திகதி ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் ஐக்கிய இராச்சியம், பொதுநலவாய செயலகம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் உலக புலமைச்சொத்து அமைப்பு ஆகியவற்றுடன் 2022 பெப்ரவரி 28ஆந் திகதி உயர்மட்ட இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டனர். ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐ.நா. மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் தாரிக் … Read more