பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கௌரவ பிரதமர் வலியுறுத்தல்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இன்று (02) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். பெலாரஸ் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் சுமார் 1500 இலங்கை மாணவர்களின் பெற்றோர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விரைந்து செயற்பட்டு கௌரவ பிரதமர் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய … Read more

இலங்கையில் 60 வீதமான பெண்கள், குடும்ப வன்முறையால் பாதிப்பு

இலங்கையின் கிராமப்புறங்களில் வாழும் 100 பெண்களில் 60 பேர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் என்று வடமத்திய மாகாண சிறுவர் உரிமைகள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான பயிற்சி ஆலோசகர் கங்கானி திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு ஆண்கள் பலியாகி வருவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, திம்புலாகலை பிரதேச செயலகப் பிரிவில் மட்டும் சுமார் 500 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார். தேசிய சமாதானப் … Read more

அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக ஆரம்பிப்பது சாத்தியமில்லை

தற்போது நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக ஆரம்பிப்பது சாத்தியமில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் விடுதிகளில் தங்கி கல்வி கற்பதனால்; அவர்களிடையே கொவிட் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ளவாறு பல்கலைக்கழக கட்டமைப்பு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். விடுதிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பொதுவாகப் பயன்படுத்துவதனால் மாணவர்களிடையே கொவிட் பரவுவதைத் தடுக்க … Read more

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர அழகியல் பெறுபேறுகள் இந்த வாரம்

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இந்த வாரம் வெளிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று நிலைமை காரணமாக, க.பொ.த சாதாரண தர இசை, நடனம் மற்றும் நாடகம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் குறித்த காலத்தினுள் நடத்தப்படவில்லை.  அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இன்றி … Read more

இன்றைய (02.03.2022) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:   இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:  

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் அரசாங்கம் மன்னிப்பு

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் சுமுகமான இருதரப்பு உறவுகளை நோக்காகக் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் மற்றும் மியன்மார் வைர விழா யூனியன் தினத்தை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் யூனியன் குடியரசு அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளது. மியன்மார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததால், ஏழு இலங்கை மீனவர்களுடன் கூடிய ‘துஷன் புதா’ IMUL-A-0741NBO என்ற இலங்கை மீன்பிடிக் கப்பல் மியன்மார் அதிகாரிகளால் 2021 டிசம்பர் 03ஆந் திகதி கைது செய்யப்பட்டது. … Read more

இளைஞர்களுக்கு இலவச சாரதி பயிற்சி

ஏறாவூர் நகர பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இளைஞர்களின் நலன் கருதி இலகு வாகன பயிற்சியும், சாரதி அனுமதிப்பத்திரமும் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இதற்காக 96 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டினை கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அல்ஹாஜ் அல்ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு இளைஞருக்கு ரூபா 25,000 செலவில் மூன்று மாத கால வாகன சாரதி பயிற்சியும்இ … Read more

குறைந்த அழுத்தப் பிரதேசம்:கிழக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடைந்து கொண்டு மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. … Read more

நெல் அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு

பெரும்போகத்தில் நெல் அறுவடை குறைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஹெக்டயருக்கு 50 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். கடந்த பெரும்போகத்தில் 11 இலட்சம் விவசாயிகளினால் மேமற்கொள்ளப்பட்ட சுமார் எட்டு இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் அறுவடை குறைந்துள்ளது. இவர்களுக்கு இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். உயர்ந்த பட்சம் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பிற்கு இந்த இழப்பீட்டை வழங்கத் … Read more