கித்தல் எல்ல நீர்வீழ்ச்சி: ஜேர்மன் நாட்டவர் உயிரிழப்பு
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்தல் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று (27) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 33 வயதுடைய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (28) பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. இந்த சம்பவம் குறித்து எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.