உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு கருத்து

இந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி அதிகார சபை வாக்கெடுப்பு தொடர்பாக ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உரித்தாவதால் அந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 23 ஆம் திகதி தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (25) பாராளுமன்றத்தில் முன்வைத்த இரங்கல் பிரேரணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த ரத்நாயக்க, ஆர்.ஆர்.டபிள்யூ.ராஜபக்ஷ, சோமவீர சந்திரசிறி, பி.பீ.திசாநாயக்க மற்றும் எச்.ஆர்.மித்ரபால ஆகியோரின் மறைவு குறித்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இன்று (25) பாராளுமன்றத்தில் முன்வைத்த இரங்கல் பிரேரணை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த ரத்நாயக்க, ஆர்.ஆர்.டபிள்யூ.ராஜபக்க்ஷ, சோமவீர சந்திரசிறி, பி.பீ.திசாநாயக்க மற்றும் எச்.ஆர்.மித்ரபால ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் பிரேரணையை நான் கௌரவ சபையில் முன்வைக்கிறேன். பொலன்னறுவையில் இருந்து அரசியலுக்கு வந்த ஆனந்த சரத் குமார ரத்நாயக்க அவர்கள், வடமத்திய … Read more

ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு, முதலீட்டுச் சபையுடன் இணையவழி வலையமர்வு – ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு

ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையத்தள இணையவழி வலையமர்வில் 80க்கும் மேற்பட்ட எதிர்கால ஜப்பானிய நிறுவனங்கள் பங்கேற்றன. ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு ஒருங்கிணைப்புக்களை எடுத்துரைத்தார். தகவல் தொழில்நுட்பத் துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விவசாயத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதை அவர் வலியுறுத்தினார். இலங்கையில் கிடைக்கும் உயர்தர கிரஃபைட்டில் 30% ஈ.வி. பெட்டரிகளுக்கான மூலப்பொருளாகும் எனக் குறிப்பிட்ட தூதுவர், உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புக்களை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு … Read more

இந்திய அணி வெற்றி

சுற்றுலா இலங்கை அணிக்கும் , இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்று ரி 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சென்றுள்ளது.  இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது  ரி 20 போட்டி லக்னோவில் நேற்று (24) ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை மேற்கொண்டது. இந்திய … Read more

ஊடகங்களின் பௌதீக விரிவாக்கத்திற்கு ஏற்ப அதன் தரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி அவசியம்

ஊடகங்களின் பௌதீக விரிவாக்கத்திற்கு ஏற்ப அதன் தரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி தற்போது அவசியம் என்று அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற, பாடசாலை ஊடகக் கழகங்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் எதிர்காலம் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்சமயம் ஊடகங்கள் முழு சமூகத்தையும் உள்ளடக்கும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது கடந்த ஆண்டு பிற்பகுதியில் சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்ட … Read more

திறைசேரிக்குச் செலுத்தவேண்டிய உரிமைத்தொகையை செலுத்துங்கள்

புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகத்தின் ஊடாக அரசாங்கத்தின் திறைசேரிக்கு செலுத்தப்பட வேண்டிய உரிமைத்தொகை பல வருடங்களாக உரிய முறையில் பரிமாற்றம் செய்யப்படவில்லையென்றும், இதனை உரிய முறையில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழுவின் (கோப் குழு) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேரசிரியர் கௌரவ சரித ஹேரத் வலியுறுத்தினார். புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகம் 23.02.2022 அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதற்கமைய 2015 … Read more

உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான ஆலோசனை

உக்ரேனில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உக்ரேனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் இது தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள 24×7 அவசர தொலைபேசி இலக்கமான +90 534 456 94 98, நிலையான தொலைபேசி இலக்கமான +90 312 427 10 32 மற்றும் … Read more

அதுகல்புர நுழைவாயிலில் முதல் மாதத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான வருமானம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) திறந்து வைக்கப்பட்ட முதல் மாதத்தில், அரசாங்கம் 100 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். 15-01-2022 அன்று மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான இந்தப் பகுதி நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் முதல் 12 மணித்தியாலங்களுக்குள் பொதுமக்கள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. 16-01-2022 அன்று மதியம் 12.00 மணிக்குப் பிறகு நெடுஞ்சாலையில் பயணம் செய்ய கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது. 16.01.2022 முதல் … Read more

சில தினங்களில் மேலும் ஒரு கப்பலில் எரிபொருள்

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் குறைவடைந்துவிடும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. 35 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதியை செலவிட்டு, விடுவிக்கப்பட்டுள்ள கப்பலில், 37 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசல் தரையிறக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் மேலும் ஒரு கப்பல் எரிபொருளுடன் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.