22 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
வடக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈட்பட்டிருந்த இரண்டு ட்ரோலர் படகுகளை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர். அவற்றிலிருந்த 22 இந்திய மீனவர்களையும் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். காங்கேசந்துறை – கோவிலன் கடற்பிரதேசத்தில் வைத்து படகுகளை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர். இந்த மாதத்தில் மாத்திரம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈட்பட்ட எட்டு படகுகளில் சுமார் 51 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.