நாட்டை விட்டு சென்ற வைத்தியர்கள் நாட்டிற்கு மீளத் திரும்புவதில் ஆர்வம் 

 கொரோனா தொற்று மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள் மீண்டும் நாட்டுக்கு வருகின்ற நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ்  பதிரண  நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  மருத்துவ (திருத்த) சட்ட மூலங்கள் இரண்டின் இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.  கடந்த இரண்டு மாதங்களுக்குள் நாட்டை விட்டு சென்ற மருத்துவர்கள் மீண்டும் நாட்டிற்கு வருகை தந்து சேவையை வழங்க ஆரம்பித்துள்ளதாகவும் அது மிகவும் சிறந்த பெறுபேறு என்றும் சுகாதார … Read more

நாட்டின் செங்கல் மற்றும் ஓட்டுத் தொழிற்சாலைகளுக்கு புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் அறிமுகம்

கொரிய அரசாங்கத்தின் அனுசரணையில் இலங்கையில் செங்கல் மற்றும் ஓட்டுத் தொழிற்சாலைகளில் புதிய தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்துவதனால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மாகாண மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வாக்கும்புர கடந்த புதன்கிழமை (06) கொரிய முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடல் சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது. இவ்வேலைத்திட்டத்தின் கீழ் உற்பத்தியில் காணப்படும் சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டு, சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் புகை வெளியேற்றத்தைக் குறைத்து சுற்றாடல் நேசமிகு முறையூடாக நிலைபேறானதாக முன்னேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச ஆயுர்வேத விரிவுரைகள் மற்றும் கல்வி வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பம்

 சர்வதேச ஆயுர்வேத விரிவுரைகள் மற்றும் கல்வி வர்த்தக கண்காட்சி இன்று (09) ஆரம்பமாகவுள்ளதுடன் கண்காட்சி எதிர்வரும் 11 ஆம் திகதி வரை காலி மாநகர சபை மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.  இந்த நிகழ்வில் இலவசமாக கலந்துகொண்டு, வெளிநாட்டு கல்விக்கான உதவித்தொகையுடன் 90 க்கும் மேற்பட்ட சுகாதார கல்வி நிலையங்ககஜ பார்வையிடும் வாய்ப்பைப் பெறுங்கள்.  கொன்சல் ஜெனரல் இந்திய உயர்ஸ்தானிகர் ஹர்விந்தர் சிங், கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் எச்.டி.கருணாரத்ன, கொழும்பு பல்கலைக்கழக சுதேச மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி … Read more

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி குறித்த தகவல்

சீஷெல்ஸில் சிறை அதிகாரிகளாக பணிபுரிய ஆட்களை ஆட்சேர்ப்பு செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் முறையான அனுமதி இன்றி இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நீர்கொழும்பு நகரில் இயங்கும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இந்த வேலைகளுக்கு சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்துள்ளது. பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட … Read more

ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில்  பாரிய நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 அளவிலான நிலநடுக்கங்கள் என அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம், ஜப்பானின் நிச்சினனுக்கு வடகிழக்கே 20 கி.மீ தொலைவில் 25 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.07 பி;.ப 04.30 வரை) 16 முறைப்பாடுகள்…

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்;, கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.07 பி;.ப 04.30 வரை) தேர்தல் தொடர்பாக 16 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.08.07ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 137 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிடல் அணுகலுடன் சேவைகளை வழங்கும் இலங்கையின் கொடுகடன் தகவல் பணியகம்

இந்தவருடம் ஜனவரியில் அறிவிக்கப்பட்ட டிஜிடல் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலின் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையின் கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) டிஜிடல் வசதிகள் மற்றும் பிற வாடிக்கையாளர் சேவைகளைப் பயன்படுத்தி இலங்கையர்கள் தமது கடன் நிலை தொடர்பாக தெரிந்துகொள்ளவும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கடன் நிலைகளை நிருவகிப்பதற்கும் ஊக்குவிக்கின்றது. இலங்கையின் கொடுகடன் தகவல் பணியகம் கடன் வழங்குபவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையேயான தகவல் இடைவெளியைக் குறைப்பதில் பங்களிப்பதுடன், அதி நவீன கடன் தகவல் மேலாண்மை அமைப்பையும் பயன்படுத்துகின்றது. இவ்வமைப்பு சகல … Read more

தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்சம்…

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.08 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 20 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.08.08ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 157 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இலங்கை மிகவும் குறுகிய காலத்திற்குள் பொருளாதார ரீதியாக மீண்டும் எழுந்தது

வீழ்ச்சியடைந்த நாடுகளுக்கிடையில் இலங்கை மிகவும் குறுகிய காலத்திற்குள், பொருளாதார ரீதியா மீண்டதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். லஸார்ட் – பிரான்ஸ் மற்றும் கிளிபேர்ட் சான்ஸ் கம்பனிகளுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பாக மற்றும் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்யும் இறுதித் திகதி என்பன தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்து … Read more

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம்..

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (07) பாராளுமன்ற குழு கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. குறிப்பாக அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகள் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு பதில் வழங்கப்பட்டது. இதன்போது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கட்டுவன பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரிதிகஹாய, சியராபிட்டிய, வெலிபிட்டிய, மித்தெனிய ஆகிய பகுதிகளுக்கு காகிரியோபடை நீர் திட்டத்தின் மூலம் நீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களால் பிரேரணை கொண்டுவரப்பட்டது. மேலும் உத்தேச … Read more