இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் தகுதியை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் நிறைவு

இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்தை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இலங்கை கிரிக்கெட் அணி தனது ஆரம்ப டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அதாவது 1982 ஆம் ஆண்டு இன்று போல் ஒரு நாளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கொழும்பு பீ சரவணமுத்து விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆரம்ப டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கியவர் மறைந்த பந்துல வர்ணபுரவாகும். இலங்கை கலந்துக்கொண்ட ஆரம்ப டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி … Read more

மட்டு, அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை மாவட்டங்களுக்கு மஞ்சள், இஞ்சி ஆடு வளர்ப்புத்திட்டம்

பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை மாவட்டங்களுக்கு மஞ்சள், இஞ்சி மற்றும் ஆடு வளர்ப்புத் திட்டங்கள் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப் படவுள்ளன. அரசின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக மனை சார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கையினை மேம்படுத்தும் நோக்குடன் கிழக்கு மாகாணம் உட்பட பொலன்னறுவை மாவட்டத்திலும் இத்திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனடிப்படையில் … Read more

கட்டுநாயக்கவில் இருந்து நீர்கொழும்பு நகரத்திற்கு 40 நிமிடங்களில் பயணிப்பதற்கான ரெயில் சேவை

கட்டுநாயக்கவில் இருந்து நீர்கொழும்பு நகரத்திற்கு 40 நிமிடங்களில் பயணிப்பதற்கான ரெயில் சேவைக்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக ,கட்டுநாயக்க – நீர்கொழும்பு ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையில் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்கான ரெயிலை உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது. இதன் மூலம் கொழும்பு கோட்டையிலிருந்து கட்டுநாயக்க வரை செல்லும் பயணிகளுக்கு தற்போது  40 நிமிடங்களுக்குள் சென்றடைவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. … Read more

பயிலுனர் ஆசிரியர்களுக்கான நிகழ்வில் 51 வது படை பிரிவு தளபதி ஆரம்ப உரை

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய கல்வியியற் கல்லூரியில் ஏறத்தாழ 750 பயிலுனர் ஆசிரியர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற செயலமர்வில் ‘தலைமைத்துவம்’ என்ற தலைப்பில் ஆரம்ப உரையொன்றை நிகழ்த்தினார். கல்லூரியின் பயிற்சி குழு எண் 18, 19 மற்றும் 20 களின் கீழான தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இன மாணவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர். ஆரம்ப அமர்வின் போது, மேஜர் ஜெனரல் சந்தன … Read more

பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் , கண் சிகிச்சை நோயாளிகளுக்கான உள்ளக வார்ட் திறப்பு

வேரஹெர கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் மற்றும் கண் மருத்துவ நோயாளிகளுக்கான உள்ளக வார்டு வசதி அப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜெனரல் மிலிந்த பீரிஸினால் 2022 பெப்ரவரி 15ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவில் அதிதிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பல்கலைக்கழக வைத்தியசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் பி.ஜெயன் மெண்டிஸ், வைத்தியசாலை சேவையின் பணிப்பாளர் பிரிகேடியர் பி.எஸ்.திலகரத்ன, நிர்வாகப் பணிப்பாளர் கேர்ணல் ஈஎம்ஜீஎச்கேபி தெஹிதெனிய RWP RSP … Read more

நான்காவது கொழும்பு கடற்படைப் பயிற்சி நிறைவு

இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட நான்காவது கொழும்பு கடற்படை பயிற்சி – 2022 திங்கட்கிழமை (பெப்ரவரி, 14) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த கடற்படை பயிற்சி இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிற்சியானது கடற்படை வீரர்களின் தொழில்முறை மற்றும் அனுபவங்களை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியின் கடல் சார் பயிற்சிகள், நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பிரசன்ன மஹாவிதான தலைமையில் இலங்கை … Read more

இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை மற்றும் பெலாரஸ் மேம்படுத்தல்

பெலாரஸ் குடியரசிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள ரஷ்யாவுக்கான தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே, 2022 பிப்ரவரி 02-05 வரையான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பெலாரஸ் அதிகாரிகளுடன் பல சந்திப்புக்களை நடத்தினார். மின்ஸ்கில் தங்கியிருந்த தூதுவர், பெலாரஸ் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு அலெக்சாண்டர் லுகாஷென்கோவிடம் தனது நற்சான்றிதழ் கடிதங்களை வழங்கி வைத்ததுடன், வெளிவிவகார அமைச்சர் மாண்பமிகு விளாடிமிர் மேக்கியுடன் உரையாடிய அதே வேளையில், ஒத்துழைப்பின் வாய்ப்புக்கள் குறித்து பெல்டா செய்தி நிறுவனத்திற்கு செவ்வியளித்தார். பேராசிரியர் … Read more

219ஆவது 'அமாதம் சிசிலச' நிகழ்வில் கௌரவ பிரதமர் பங்கேற்றார்

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேசத் தொடரின் 219ஆவது தர்ம உபதேசம் இன்று (2022.29.16) அலரி மாளிகையில் நடைபெற்றது. வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து கௌரவ பிரதமர் தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்த மஹவ, இபலோகம ஸ்ரீ போதிருக்காராமதிகாரி, இலங்கையின் பௌத்த மறறும் பாலி பல்கலைக்கழகத்தின் முதுகலை கற்கைநெறி பீட பீடாதிபதி பேராசிரியர் வணக்கத்திற்குரிய மொரகொல்லாகம உபரதன தேரரை வரவேற்றார். பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் … Read more

2022ஆம் வருடத்தின் முதலாவது சட்டத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று முன்தினம் (14) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கடந்த 08ஆம் திகதி இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், திருத்தங்களுடன் இது நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன் ஊடாக 1981ஆம் ஆண்டு 66ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் எனப் பெயர் மாற்றம் … Read more

இலங்கை அபிவிருத்தி முறிகளின் நேரடி வழங்கல் ஊடாக திரட்டப்பட்ட நிதியங்கள்

இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைகளின் செயல்திறன்வாய்ந்த தன்மையினை உறுதிப்படுத்தும் விதத்தில் 2022 சனவரி 01 தொடக்கம் 2022 பெப்புருவரி 15 வரை இலங்கை அபிவிருத்தி முறிகளின் நேரடி வழங்கல் வாயிலாக ஐ.அ.டொலர் 111.5 மில்லியன் கொண்ட தொகையுடைய நிதியங்கள் திரட்டப்பட்டுள்ளன. மேற்குறித்த காலப்பகுதியின் போது இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகள், மூன்று மாதங்களிலிருந்து ஐந்து வருடங்களைக் கொண்ட வீச்சுடைய முதிர்ச்சிப் பரம்பலில் காணப்பட்டு, பாரியளவிலான … Read more