கொவிட் நோயாளர்கள் வைத்திய சிபாரிசு இன்றி மீள்சக்திக்கான மருந்தை பயன்படுத்த வேண்டாம்

கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் மருந்து வகைகளை எடுக்கும் போது அவர்களுக்குள்ள  நோய் அறிகுறிகளுக்கு  மாத்திரம் மருந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சுகாதார பிரிவு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. வைத்திய சிபாரிசு இன்றி மீள்சக்திக்கான எந்த மருந்து வகைகளையும் எடுக்க வேண்டாம் என்று இயன் மருத்துவர் (physiotherapist) விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன ,சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று மாலை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்

வெளிநாடுகளில் பணியாற்றும் 950 இலங்கையர்கள் டிஜிட்டல் பதிவு

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழில் வல்லுநர்கள் 950 பேர் தேசிய விஞ்ஞான அமைப்பின் உலகளாவிய டிஜிட்டல் மேடையில் பதிவுகளை மேற்கொண்டிருப்பதாக அதன் சர்வதேச தொடர்புகள் குறித்த பிரிவின் தலைமை அதிகாரி ஜெ.பீ சாந்தசிரி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.

வட மாகாணத்தில் மலேரியா தொற்று பரவும் அபாயம்

வட மாகாணத்தில் தற்பொழுது  மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நான்கு  வார காலத்திற்குள் 4 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு நோயாளரை அடையாளம் காண்பதன் மூலம் அது ஆயிரம் நோயாளர்களின் ஆரம்பமாக அமையும் என்று சுகாதார அமைச்சின் மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். இந்த நான்கு நோயாளர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக அவர் கூறினார். இந்த நோய் பரவும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், … Read more

மின்சார கட்டணத்தை செலுத்தாவர்களுக்கு விசேட அறிவிப்பு

மின்சார கட்டணத்தை செலுத்தாத பாவணையாளர்களுக்கு அதற்கான மேலதிய கட்டணத்தை அறவிடுதல் அல்லது அவர்களுக்கான மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டிருப்பதாக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இததொடர்பான உத்தரவு இன்று வெளியிடப்பட இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

“அரச சேவை பாதிக்காத வகையில், அனுமதிக்கப்பட்ட தாதியர் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்…” “வைத்தியர், தாதியர் உள்ளிட்ட சுகாதாரச் சேவையை மதிக்கிறோம்…” ஜனாதிபதி தெரிவிப்பு

“வைத்தியர், தாதியர் உள்ளிட்ட சுகாதாரச் சேவையானது மிகவும் மதிப்புமிக்கதாகும். நாட்டின் நிதி நிலைமையைச் சரியாகப் புரிந்துகொண்டு, அனுமதிக்கப்பட்டுள்ள தாதியர் கோரிக்கைகளை ஒட்டுமொத்த அரச சேவைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பொதுச் சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் கோரிக்கைக்கமைய, இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார். மே … Read more

இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் தகுதியை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் நிறைவு

இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்தை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இலங்கை கிரிக்கெட் அணி தனது ஆரம்ப டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அதாவது 1982 ஆம் ஆண்டு இன்று போல் ஒரு நாளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கொழும்பு பீ சரவணமுத்து விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆரம்ப டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கியவர் மறைந்த பந்துல வர்ணபுரவாகும். இலங்கை கலந்துக்கொண்ட ஆரம்ப டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி … Read more

மட்டு, அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை மாவட்டங்களுக்கு மஞ்சள், இஞ்சி ஆடு வளர்ப்புத்திட்டம்

பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை மாவட்டங்களுக்கு மஞ்சள், இஞ்சி மற்றும் ஆடு வளர்ப்புத் திட்டங்கள் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப் படவுள்ளன. அரசின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக மனை சார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கையினை மேம்படுத்தும் நோக்குடன் கிழக்கு மாகாணம் உட்பட பொலன்னறுவை மாவட்டத்திலும் இத்திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனடிப்படையில் … Read more

கட்டுநாயக்கவில் இருந்து நீர்கொழும்பு நகரத்திற்கு 40 நிமிடங்களில் பயணிப்பதற்கான ரெயில் சேவை

கட்டுநாயக்கவில் இருந்து நீர்கொழும்பு நகரத்திற்கு 40 நிமிடங்களில் பயணிப்பதற்கான ரெயில் சேவைக்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக ,கட்டுநாயக்க – நீர்கொழும்பு ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையில் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்கான ரெயிலை உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது. இதன் மூலம் கொழும்பு கோட்டையிலிருந்து கட்டுநாயக்க வரை செல்லும் பயணிகளுக்கு தற்போது  40 நிமிடங்களுக்குள் சென்றடைவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. … Read more

பயிலுனர் ஆசிரியர்களுக்கான நிகழ்வில் 51 வது படை பிரிவு தளபதி ஆரம்ப உரை

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய கல்வியியற் கல்லூரியில் ஏறத்தாழ 750 பயிலுனர் ஆசிரியர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற செயலமர்வில் ‘தலைமைத்துவம்’ என்ற தலைப்பில் ஆரம்ப உரையொன்றை நிகழ்த்தினார். கல்லூரியின் பயிற்சி குழு எண் 18, 19 மற்றும் 20 களின் கீழான தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இன மாணவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர். ஆரம்ப அமர்வின் போது, மேஜர் ஜெனரல் சந்தன … Read more

பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் , கண் சிகிச்சை நோயாளிகளுக்கான உள்ளக வார்ட் திறப்பு

வேரஹெர கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் மற்றும் கண் மருத்துவ நோயாளிகளுக்கான உள்ளக வார்டு வசதி அப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜெனரல் மிலிந்த பீரிஸினால் 2022 பெப்ரவரி 15ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவில் அதிதிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பல்கலைக்கழக வைத்தியசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் பி.ஜெயன் மெண்டிஸ், வைத்தியசாலை சேவையின் பணிப்பாளர் பிரிகேடியர் பி.எஸ்.திலகரத்ன, நிர்வாகப் பணிப்பாளர் கேர்ணல் ஈஎம்ஜீஎச்கேபி தெஹிதெனிய RWP RSP … Read more