சீரான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 15ஆம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென் மாகாணத்தில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

கொரோனா தொற்று பாதிப்பால் 58 இலட்சம் பேர் உயிரிழப்பு

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 58 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221 நாடுகளில் பரவியுள்ள நிலையில், மக்களை தொடர்ந்து பாதித்து வருகின்றது. இதனால் உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்துகின்றன. ஆனாலும், வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து மக்களை பாதித்து  உயிரிழப்புக்களையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இதற்கமைய, கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 இலட்சத்து … Read more

சமுதித்த சமரவிக்ரம ஊடகவியலாளரின் வீட்டிற்கு வெகுஜன ஊடக அமைச்சர் விஜயம்

சமுதித்த சமரவிக்ரம சிரேஷ்ட ஊடகவியலாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார். பொலிஸ் மா அதிபரினால் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கான விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியதுடன், 60 பொலிசாரை கொண்ட குழு ஒன்று CCTV காட்சிளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். நேற்று (14) தனிப்பட்ட முறையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீட்டுக்கு தான் சென்றதாக குறிப்பிட்ட அமைச்சர், பொறுப்பு … Read more

மிகை வரி சட்ட மூலத்தில் ETF, EPF நீக்கப்படும்

மிகை வரி சட்ட மூலத்தில் ,ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன நீக்கப்படும் என்று நிதி அமைச்சர் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இதற்கான திருத்தம் பாராளுமன்ற விவாதத்திற்கு பின்னர் தெரிவுக்குழு சந்தர்ப்பத்தில் நிதியமைச்சரினால் சமர்பிக்கப்படும் என்றும் … Read more

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி:நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென மூன்று அமைச்சரவை துணைக்குழுக்கள்

அத்தியாவசிய பொருட்களும், கைத்தொழில்சார்ந்த மூலப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென மூன்று அமைச்சரவை துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஏற்றுமதி கைத்தொழிலுக்கான மூலப்பொருட்கள், கைத்தொழில்சார்ந்த பொருட்கள் என்பனவற்றை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிமுறைகளை அடையாளம் காணும் நோக்கோடு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று துணைக்குழுக்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் தலைமை தாங்குகிறார். ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் வெளிவிவகாரம், … Read more

விசேட சலுகை விலையில் லங்கா சதொச தண்ணீர் போத்தல்கள்

அரசு மற்றும் அரசு சார்பான நிறுவனங்களுக்கு லங்கா சதொச தண்ணீர் போத்தல்களை விசேட சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இவ்வாறு விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல் ஒன்றை மீள ஒப்படைக்கும் போது ஏற்கனவே அறவிடப்பட்ட 10 ரூபா மீள செலுத்தப்படும். இதற்கமைவாக 19 ரூபாவுக்கு 500 மில்லி லிட்டர் தண்ணீர் போத்தலை அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை லங்கா … Read more

50 மில்லியன் ரூபா செலவில் பத்தரைக்கட்டை பிரதேசத்திற்கு குடிநீர் திட்டம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பத்தரைக்கட்டை கிராமத்திற்கு குடிநீர் இணைப்பை வழங்குவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நேற்று (14)  திங்கட்கிழமை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்றது. இந்த திட்டத்தை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சி.சந்திரகாந்தன் ஆரம்பித்துவைத்துள்ளார். அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சுமார் 150 குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், இதற்காக சுமார் 50 மில்லியன் ரூபா நிதி முதற்கட்டமாக … Read more