வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 பெப்ரவரி 16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று?

ஓமிக்ரோன் வைரசு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் அடையாளம் காணப்படுகின்ற அனைத்து கொவிட் தொற்றாளர்களும் ஒமிக்ரோன் வைரஸ் வகை திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் தொற்று குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோய் என்பது தவறான கருத்தாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான நோய் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். … Read more

கடற்பரப்புகளில் சாதாரண முதல் மிதமான அலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை.தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என … Read more

தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்காக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு, மின்சார சபைக்கு வழிகாட்டல்

மின்துண்டிப்பை மேற்கொள்ளாது மின்சார சவால்களை எதிர்கொள்வது பற்றி பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் காலங்களில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கையில், இது தொடர்பான புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, பெப்ரவரி, மார்ச், ஏப்பரல் ஆகிய எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய … Read more

மின் துண்டிப்பு ……அறிவிப்பு

நாட்டில் இன்று முதல் தினமும் மின் துண்டிப்பு இடம்பெறும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு குறைந்த அளவு எரிபொருள் கிடைப்பதே இதற்குக் காரணம். மின் துண்டிப்பு மேற்கொள்ளும் முறை குறித்து இன்று(15) பிற்பகல் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்களில் நீர் மட்டம்  குறைந்துள்ளது. நீர்த்தேக்க பகுதிகளில் மழை பொழியாவிட்டால், அடுத்த இரு வாரங்களில் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று மின்சாரத் … Read more

சீரான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 15ஆம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென் மாகாணத்தில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

கொரோனா தொற்று பாதிப்பால் 58 இலட்சம் பேர் உயிரிழப்பு

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 58 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221 நாடுகளில் பரவியுள்ள நிலையில், மக்களை தொடர்ந்து பாதித்து வருகின்றது. இதனால் உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்துகின்றன. ஆனாலும், வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து மக்களை பாதித்து  உயிரிழப்புக்களையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இதற்கமைய, கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 இலட்சத்து … Read more

சமுதித்த சமரவிக்ரம ஊடகவியலாளரின் வீட்டிற்கு வெகுஜன ஊடக அமைச்சர் விஜயம்

சமுதித்த சமரவிக்ரம சிரேஷ்ட ஊடகவியலாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார். பொலிஸ் மா அதிபரினால் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கான விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியதுடன், 60 பொலிசாரை கொண்ட குழு ஒன்று CCTV காட்சிளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். நேற்று (14) தனிப்பட்ட முறையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீட்டுக்கு தான் சென்றதாக குறிப்பிட்ட அமைச்சர், பொறுப்பு … Read more