“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை அல்லது அளவு ஒரு பொருட்டல்ல…” ஜனாதிபதி தெரிவிப்பு

பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்ல என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதே சமயம், நாட்டின் அபிவிருத்திப் பணிகளும் முன்னெக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, சுமார் இரண்டு வருடக் காலமாக நாட்டை மூடி வைத்ததால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, தற்போது படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார். “ஜனாதிபதி மீது … Read more

தேசிய பல்கலைக்கழகமாக வவுனியா வளாகம் மாற்றம்… “சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள்…”

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையில் இன்று (11) இடம்பெற்றது. இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மொழி பாடநெறி:சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்திறன் ஆற்றலை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் தமிழ்மொழி மூலம் கடமை புரியும் உத்தியோகத்தர்களின் சிங்கள மொழித்திறன் ஆற்றலை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் சிங்களப்பயிற்சியைப் பூர்த்தி செய்த கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி அந் நூர் மண்டபத்தில் இடம்பெற்றது. மொழித்திணைக்களத்தின் போதனாசிரியர் எம்.எம்.செயினுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அதிதிகளாக … Read more

அனுராதபுரம் சல்காதுவ மைதானத்தில் (09) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தின் முதலாவது கூட்டத்தின்போது கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை

அனுராதபுரம் சல்காதுவ மைதானத்தில் (09) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தின் முதலாவது கூட்டத்தின்போது கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை இன்று அனுராதபுரத்தில் இருந்து புதிய பயணத்தை ஆரம்பிக்கின்றோம். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக ஞாபகம். போரில் வெற்றி பெற்ற பின்னர் 2010ஆம் ஆண்டு இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை அனுராதபுரத்தில் இருந்து ஆரம்பித்தோம். அதேபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களும் அனுராதபுரத்தில் இருந்து தனது ஜனாதிபதி … Read more

குவைத் நிதியத்தில் இருந்து மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கான கடன் ஒப்பந்தம் கொழும்பில் வைத்து கைச்சாத்து

அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் நெதல் ஏ. அல்-ஒலாயன் தலைமையிலான குழுவினர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கும் அவற்றைச் சித்தப்படுத்துவதற்குமான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தனர். கிழக்கு, தெற்காசிய மற்றும் பசுபிக் நாடுகளுக்கான நடவடிக்கைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் யூசுப் அல்-படரை உள்ளடக்கிய விஜயம் செய்திருந்த குழுவினர், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இலங்கையின் கல்வி அமைச்சர் … Read more

மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கிடையில் நேரடி விமான சேவை

மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கிடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. உஸ்பெகிஸ்தான் விமான சேவைக்கு சொந்தமான UZB 3525 என்ற விமானம் 135 சுற்றுலா பயணிகளுடன் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது. குளிர்பருவ காலத்தில் இலங்கையை இலக்காகக் கொண்டு இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் , வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரச்சினைகளை தீர்க்குமாறு கௌரவ பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

அகில இலங்கை சாசனாரக்ஷக சபையில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று முன்தினம் (10) பிற்பகல் பிரதமரின் செயலாளர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அலரி மாளிகையில் நடைபெற்ற அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு கௌரவ பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார். நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக … Read more

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் குறித்து இன்று (11) பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமர் ஆற்றிய இரங்கல் உரை

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் குறித்து இன்று (11) பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமர் ஆற்றிய இரங்கல் உரை இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம். மங்கள சமரவீர கொழும்பு றோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், லண்டனில் உள்ள புனித மார்ட்டின் உயர்கல்வி நிறுவனத்தில் தனது முதல் பட்டத்தையும் முடித்த பின்னர் 1983 இல் இலங்கை திரும்பினார். மங்கள சமரவீர 1988 இல் மாத்தறை தொகுதிக்கு … Read more