தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தோடு பேசி முடிவெடுக்க தயார்! கூட்டமைப்பு அறிவிப்பு

மே மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கபூர்வமாக நாம் அரசாங்கத்தோடு பேசி முடிவெடுக்கத் தயார். இந்திய – இலங்கை ஒப்பந்தம் வடக்கும், கிழக்கும் தமிழ் மக்களினதும் தமிழ் … Read more

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் பங்குகள் தொடர்பில் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக அடுத்த சில மாதங்களில் விண்ணப்பங்கள் கோரப்படும் என்று அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி  ரிச்சர்ட் நட்டால் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கன் விமான சேவையும் மறுசீரமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாங்கம் தெரிவித்தது.  இதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கு இந்தியாவின் டாடா குழுமம் ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகின்றது. ] ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை வாங்குவதற்கு டாடா குழுமம் ஆர்வம் … Read more

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கும் தமிழர்: பாராட்டிய டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட களமிறங்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார். அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்நிலையில், 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி வரை அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப்,  மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். விவேக் ராமசாமிக்கு பாராட்டு இதற்காக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலுக்கு அவர் விண்ணப்பித்துள்ளார். … Read more

பாடசாலை மாணவியின் மர்ம மரணம்! கார் சாரதியொருவர் சிக்கினார் – வெளிவரும் தகவல்

களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியை விடுதிக்கு அழைத்து வந்ததாக கூறப்படும் கார் சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.  தங்குமிடமொன்றுக்கு அருகில் புகையிரத பாதை பகுதியிலிருந்து 16 வயது பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோரால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சி குறித்த … Read more

அடுத்த சில நாட்களில் சூறாவளிக்குச் சாத்தியம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை படிப்படியாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைவதுடன், அடுத்த சில நாட்களில் சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  எனவே கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நாட்டை சூழவுள்ள கடற்பரப்பின் வானிலை இன்றைய தினத்திற்கான (08.05.2023) காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் … Read more

ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரசாங்கத்திற்குச் சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகள் குறிப்பிட்ட காலத்திற்கு விற்பனை செய்யப்படமாட்டாது என நிதியமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்வதற்கு திறைசேரி அனுமதியளிக்காது என உயர் நீதிமன்றத்திற்கு இன்று (8.05.2023) அறிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரி ஸ்ரீலங்கா டெலிகொம் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் SLT PLC இன் வெளியிடப்பட்ட பங்கு மூலதனத்தின் 49.50 சதவீத பங்குகளை திறைசேரி வைத்துள்ளது. இரண்டு நிறுவனங்களிலும் … Read more

இந்தியாவில் இலங்கை தமிழர் ஒருவர் செய்த தவறான செயல் அம்பலம்

போலி இந்தியக் கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயன்ற இலங்கைத் தமிழர் ஒருவர் சென்னை – வளசரவாக்கம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை கடந்த (02.05.2023) அன்று முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சென்னை- வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்த ரொபின்சன் சார்லஸ் (43) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் தகவல் ஒன்றின் அடிப்படையில் தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸார் விசா காலம் முடிந்த பிறகும், சார்லஸ் இந்தியாவில் தங்கியிருப்பதைக் கண்காணித்துள்ளனர். இதனையடுத்து, … Read more

களுத்துறையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி – பாடசாலை பெண் அதிபர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

களுத்துறை பிரதேசத்தில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் பெண் அதிபருக்கு எதிராக பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையினால் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிபருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. ஆசிரியர் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக இரண்டு மாணவிகளின் உதவியை பெற்று வருவதாகவும் அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். இதற்கு மேலதிகமாக பிரதேசத்தில் உள்ள அரசியல் பிரபலத்தின் உதவியுடன் செயற்படும் அதிபர் அந்த … Read more

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களான கோதுமை மா மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 10 ரூபாவினாலும், சீனி ஒரு கிலோகிராமின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. திரும்ப பெறப்பட்ட வரி விலக்கு கோதுமை மாவிற்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் திரும்ப பெறப்பட்டதையடுத்து, கோதுமை மாவின் … Read more

மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! சந்தேகநபர் தொடர்பில் பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

களுத்துறை தெற்கில் உள்ள தங்குமிடமொன்றுக்கு அருகாமையில் புகையிரத பாதையில் மர்மமான முறையில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாகொட பிரதேசத்தில் வசிப்பிடமாக கொண்ட 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பெற்றோரால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் நேற்று (06.05.2023) பிற்பகல் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு … Read more