"ஈழத்தை புலிகள் அழிக்கவில்லை” கஜேந்திரன் ஆவேசம்(Video)

ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு மட்டுமே இந்த இராணுவமும் பொலிஸாரும் துணை போகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.தையிட்டியில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் உலகத்திடம் இருந்து பெறப்படுகின்ற நிதியில், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு சம்பளம், சீருடை, சாப்பாடு மற்றும் வாகனம் என வழங்கப்படும் அனைத்தும் தமிழர்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தபடுகின்றன. இந்த பிராந்தியம் 2009 … Read more

சம்பளம் மற்றும் சகல கொடுப்பனவுகள்! அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரச ஊழியர் எதிர்வரும் செவ்வாய்கிழமை(09.05.2023) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளனர். அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்த தொகுதியில் இல்லாமல் வேறு தொகுதியில் பணியாற்ற  முடியுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். சகல கொடுப்பனவுகளும் வழங்கப்படும் இது தொடர்பான சுற்றறிக்கையை தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்ப இராஜாங்க அமைச்சரின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து சகல … Read more

மர்மமாக உயிரிழந்த மாணவி தொடர்பில் பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

 களுத்துறை நகரில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது பாடசாலை மாணவி மேலும் மூவருடன் தற்காலிக தங்குமிடத்திற்குள் நுழைந்ததைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. குறித்த சிறுமி நேற்று பிற்பகல் குறித்த பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு மேலும் இரு இளைஞர்கள் மற்றும் சிறுமி ஒருவருடன் வந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த குழுவினர் நேற்று மாலை 6.30 மணியளவில் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அந்த ஹோட்டலில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், … Read more

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்! காலநிலை தொடர்பான அவசர அறிவிப்பு

தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை சுற்றி கொந்தளிப்பு நிலை உருவாகியுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த கடல் கொந்தளிப்பு நிலை அடுத்த சில நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் சூறாவளியாக மாறும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. மக்களுக்கு எச்சரிக்கை எனவே, 5 – 10 வடக்கு அட்சரேகைகள், 90 – 100 கிழக்கு தீர்க்கரேகைகள் மற்றும் 1 – 4 வடக்கு அட்சரேகைகள், 85 – 92 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு … Read more

வெளிநாட்டிற்கு பறந்த பசில் ராஜபக்ச…!

முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான பசில் ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு சென்றுள்ளார். பசில் ராஜபக்சவும் அவரது மனைவியும் இன்று(07.05.2023) காலை புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன. எமிரேட்ஸுக்கு சொந்தமான EK-649 என்ற விமானத்தில் அதிகாலை 03.15 மணியளவில் இருவரும் துபாய்க்கு புறப்பட்டுள்ளனர். Source link

ஜனாதிபதி ரணிலின் கேள்விக்கு மன்னர் சார்லஸ் வழங்கியுள்ள பதில்!

மன்னர் சார்லஸிற்கு மீண்டும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு விருப்பம் உள்ளதா என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் நேற்று (06.05.2023) முடிசூடினார்.   சாதகமான பதில்  இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக லண்டன் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சார்லஸ் மன்னரை சந்தித்த போதே இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இதன்போது மீண்டுமொருமுறை இலங்கை வருகின்றீர்களா நான் உங்களிற்கு அழைப்பு விடுக்கலாமா என ஜனாதிபதி மன்னர் சார்லஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு … Read more

3 பேருடன் ஹோட்டலுக்கு வந்த சிறுமி சடலமாக மீட்பு

களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு இளைஞன் ஒருவருடன் வந்த 16 வயதுடைய சிறுமியின் நிர்வாண சடலம் ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள ரயில் பாதையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஒருவரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சிறுமியுடன் விடுதிக்கு வந்ததாக கூறப்படும் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுமியுடன் அறையில் தங்கியிருந்ததாக கூறப்படும் இளைஞன் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த சிறுமி மேலும் … Read more

பின் தொடர்ந்த ஆன்மா! எதிர்பாராத திருப்பங்களுடன் விபரீதமான முடிவு(Video)

மனித வாழ்வில் எந்தளவிற்கு தெய்வ சக்தியின் ஆதிக்கம் இருக்கிறதோ அந்தளவு அமானுஷ்யங்களும் நடக்கின்றன என்பது பலரது நம்பிக்கை. இவற்றில் பலர் திகிலூட்டும் அனுபவங்களை பெற்றுள்ளதாக பகிர்ந்துள்ளனர். அந்த அனுபவங்களை நேரடியாக நாமே பெறாவிட்டாலும் கூட கதையாக கேட்கும் போதே பீதியில் ஆழ்த்தும் சம்பவங்கள் பல. ஒரு சில சம்பவங்கள் உலகளவில் பலரையும் நடுங்க வைத்து ஆட்டங்காண வைத்துள்ளன. அப்படியொரு கதிகலங்க வைக்கும் விடை தெரியாத மர்மம் அடங்கிய உண்மைச் சம்பவமொன்று தொகுப்பாக, Source link

கொழும்பில் வெசாக் பார்ப்பதற்காக சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த கதி

கொழும்பில் வெசாக் பார்ப்பதற்காக சென்று திரும்பிக்கொண்டிருந்த பொலேரோ ரக கெப் வண்டியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாணந்துறை வலான பிரதேசத்தில் சாரதி உறங்கியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வாகனம் களுத்துறை நோக்கி பயணித்த போது, ​​சாரதி உறங்கியமையால் வாகனத்தின வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தலைகீழாக கவிழ்ந்ததால் வீதியின் நடுவில் இருந்த மின் கம்பம் சேதமடைந்துள்ளது. மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் அங்கு பயணித்துள்ளனர். விபத்தில் மூன்று சிறுவர்கள் … Read more

16 வருட போராட்ட வாழ்கை 8 வருட சிறை வாழ்கை! முன்னாள் போராளியின் வலிசுமந்த கதை (Video)

சொந்த நாட்டு மக்களின் மீதே போர் தொடுத்து இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து, உடமைகளை சூறையாடி மீண்டும் மீண்டும் அந்த இனத்தை அடக்கி நெருக்கடிக்கு உள்ளாக்கி இந்த நூற்றாண்டிலே மிகப்பெரும் மானுட பேரவலத்தை நிகழ்த்தி மீண்டும் ஆட்சி ஏறி அதிகாரம் செலுத்தும் ஓர் அரசாங்கம் எம் நாட்டில் மட்டுமே இருக்க முடியும். எமது நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற பல நெருக்கடியான மற்றும் துன்பியல் நிகழ்வுகளுக்குள்ளால் இந்த தமிழினம் இன்னும் வாழ்கிறது என்றால் அதிலும், தனது இருப்பை … Read more