பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு தயாராகும் லண்டன்! பாதுகாப்பு தீவிரம் : தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயார்
பிரித்தானியாவின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ள 3ஆம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் முடிசூட்டு விழா நாளைய தினம்(06.05.2023) மிக பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ளது. இந்த விழாவை உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடத்த பக்கிம்காம் அரண்மனை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் இந்த பிரம்மாண்ட விழாவை காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லண்டன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதுடன், இந்த விழாவை இதுவரை நடைபெறாத வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. … Read more