மாற்று வழியில்லாத போது ஐ.எம்.எப் இற்கு செல்ல நடவடிக்கை எடுத்திருந்தோம்! ரணில் நாடாளுமன்றில் அறிவிப்பு (Live)
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்கான அனுமதியை அனைவரும் நாடாளுமன்றில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் விசேட உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல நடவடிக்கை மேலும் தெரிவிக்கையில், நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை தவிர மாற்று வழியொன்று இல்லை. மாற்று வழியொன்று இல்லாத நிலையில், யாரும் அவ்வாறான வழிமுறையொன்றை முன்வைக்காத போதே, சர்வதேச … Read more