ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு! சற்றுமுன் நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு (Live)

பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் அழைப்பு விடுக்கும் வகையிலான உத்தரவொன்றை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பிரதிச் சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்றைய தினம் (25.04.2023) அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவு பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 12வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் … Read more

தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் மரபணு சோதனை

 பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பிலான விசாரணைகளுக்காக பிரபல கிரிக்கட் வர்ணணையாளர் பிரயன் தோமசின் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ரஞ்சிதா ஜயசூரிய இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். பிரயன் தோமசின் மரபணு குறித்து பரிசோதனை நடத்துமாறு நீதவான், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். மரபணு சோதனை  கொலை தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் கோரிக்கைக்கு அமைய பிரயன் தோமஸின் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. … Read more

முறையான போக்குவரத்து வசதியின்றி சிரமத்திற்கு உள்ளாகும் மாணவர்கள்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை (Photos)

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பிரமந்தனாறு மயில்வானபுரம் போன்ற பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தமது நாளாந்த கல்வி நடவடிக்கைகளுக்காக சரியான போக்குவரத்து வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர்.  மாணவர்கள் தமது நாளாந்த கல்வி நடவடிக்கைகளுக்காக ஆறு கிலோமீட்டர் அளவில் நடந்து சுண்டிக் குளம் சந்தி சென்று மீண்டும் அங்கிருந்து ஏ 35 வீதி ஊடாக பயணிக்கும் பிரதான பேருந்துகளிலே பாடசாலைக்கு சென்று வருவதாகவும் தற்பொழுது கடும் வெயில் காரணமாக … Read more

ஒரேயொரு ராசிக்காரருக்கு கிட்டவுள்ள அதிஷ்டம்! மிதுனத்தை ஆட்டிப்படைக்கும் கிரக பெயர்ச்சி- நாளைய ராசிப்பலன்

குரு பெயர்ச்சி பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் குருவால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு இருக்கையில் நாளைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கபோகின்றது என்று பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW      மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் … Read more

தமிழர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் 15வயது சிறுமியின் கேள்விகள்! தனிமையில் தவிக்கும் தாய் (Video)

வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும். அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் உண்டு. இப்படி வறுமையில் வாழும் இவரின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், மன்னார் மாவட்டத்தில் வறுமையால் தனது மகளின் … Read more

மூன்று பௌத்த துறவிகளின் கொடூரச் செயல் அம்பலம்

8 வயது பௌத்த துறவி ஒருவர் மூன்று துறவிகளால் துன்புறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டை பாதை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.   துறவறம் பூண்டு 45  நாட்களேயான இந்த சிறிய பௌத்த துறவி மந்திரத்தினை சரியாக உச்சரிக்காத காரணத்தினால் இவ்வாறு கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துன்புறுத்தல்களுக்கு உள்ளான இந்த எட்டு வயதுடைய பௌத்த துறவி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மிகக் கொடூர வன்முறைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துறவி … Read more

12 மணி நேர வேலை நேரத்தை அறிவித்த இந்தியா!

12 மணி நேர வேலை மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வலுக்கும் எதிர்ப்பு இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் … Read more

பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பாடசாலை அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வியர்வை, அதிக உடல் உழைப்பு மற்றும் பக்கவாதம், நீர்ப்போக்கு மற்றும் உமிழ்நீர் வெளியேறும் நிலைமைகள் அதிகரித்துள்ளமை ஒரு பாரதூரமான … Read more

புலம்பெயர் அமைப்புக்களிடம் பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை (Photos)

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ஏப்ரல் 2023ல் வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் நிர்வாக முடக்கலுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி முழு ஆதரவினை வழங்க வேண்டும் என பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் இன்று(23.04.2023) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, புலம்பெயர் அமைப்புக்கள்  ‘‘பிரித்தானிய இந்துக் கோவில்கள் சங்கங்கள் ஆகிய நாம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ஏப்ரல் 2023ல் வடக்கு கிழக்கில் … Read more

10 இலட்சம் முட்டைகளின் விநியோகம் குறித்து வெளியான தகவல்!

கடந்த 19ஆம் திகதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகளின் விநியோகம் குறித்து அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி முட்டைகளின் மாதிரிகளைப் பரிசோதித்த பின்னர் கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முட்டைகள் நாளைய தினம் (24.04.2023) பரிசோதிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. முட்டைகள் தொடர்பான அறிக்கை இதேவேளை, கடந்த 15ஆம் திகதி இலங்கை வந்த முட்டைகள் தொடர்பான அறிக்கை நாளைய தினம் (24.04.2023) … Read more