ஒரேயொரு ராசிக்காரருக்கு கோடான கோடி அதிஷ்டம்! கும்பத்தை ஆட்டிப்படைக்கும் கிரக பெயர்ச்சி- இன்றைய ராசிபலன்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரக பெயர்ச்சி என்கிறோம். அந்த அமைப்பே எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நிலையில் நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் இன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் இன்றைய தினம் உயர்ச்சி பெற போகும் ராசிக்காரர்கள் யார் … Read more

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம்

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம்(24.04.2023) விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர். இந்தக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதம், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு மற்றும் வாக்களிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.    ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட சந்திப்பு இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் எதிர்க்கட்சி தலைவர் … Read more

கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரில் கொண்டுவரப்படும் மாற்றம்

கொழும்பு தாமரை  கோபுரத்தின் பெயரில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாமரை என்ற பெயர் ஏற்புடையதல்ல இந்த நிலையில், தாமரை  கோபுரம் என்ற பெயரில் தாமரை என்றப் பெயரை நீக்கி  கொழும்பு கோபுரம் என மாற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.  உயரமான கோபுரத்திற்கு தாமரை என்ற பெயர் ஏற்புடையதல்ல என்பதே பெயரை மாற்றக் காரணம் என கூறப்படுகின்றது. Source link

தண்ணீர் பாவனை தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிப்பதற்கும் சமைப்பதற்கும் மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் கடுமையான வெப்பத்துடனான காலநிலை நீடித்து வருவதனால் நீரிற்கான தேவை வெகுவாக உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விவசாய செய்கைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என சபையின் பொது முகாமையாளர் வசந்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார். நீர் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் உயரமான இடங்களுக்கு … Read more

தொடருந்தில் செல்பி எடுக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற விஷேட தொடருந்தில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார். ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடையில் நேற்று மாலை தொடருந்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிஹான் என்ற 15 வயது சிறுவனே விபத்தில் சிக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரயிலின் நடைபாதையில் வந்ததாகக் கூறப்படும் குறித்த சிறுவன் செல்பி எடுக்கச் சென்று … Read more

போலியாக ஜனாதிபதி ஆலோசகரின் கையொப்பத்தையிட்ட பொலிஸ் பரிசோதகர் கைது

பொலன்னறுவை தலைமையக பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், ஜனாதிபதியின் தலைமை அதிகாரி மற்றும் அரச பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் கையொப்பத்தை போலியாக கையெழுத்திட்டு வடமத்திய மாகாணத்தில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு போலி ஆவணம் ஒன்றை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  சாகல ரத்நாயக்கவின் கையொப்பம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலன்னறுவையை சேர்ந்த ஐம்பத்தைந்து வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த … Read more

கடன் அட்டைகளின் பாவனை தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை கணிசமாக குறைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2022 டிசெம்பர் இறுதிக்குள், இலங்கையில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் மொத்த எண்ணிக்கை 52,991 இலட்சம் எனவும், இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள், இலங்கையில் செயல்பாட்டில் உள்ள மொத்த கடன் அட்டைகளின் எண்ணிக்கை 42,272 லட்சமாக இருந்தது. மத்திய வங்கி அறிக்கைகள் இதேவேளை, பெப்ரவரி மாதத்திற்குள் அது மேலும் 40,872 இலட்சமாக … Read more

வடக்கு – கிழக்கு தழுவிய பூரண கதவடைப்பு! தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக அழைப்பு

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் இன்று செவ்வாய்க்கிழமை (25.04.2023) கதவடைப்பு அனுஸ்டிக்க தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் தேசிய கட்சிகளினால் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 25ஆம் திகதி முழுமையான கதவு அடைப்புக்கு தமிழ் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Source link

ஜீ.எல் பீரிஸை பொது வெளியில் மோசமாக திட்டிய மகிந்த ராஜபக்ச

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஓர் விசரன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.  சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார். எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்கத் தயார்  கட்சியின் முன்னாள் தவிசாளர் புதிய தவிசாளர் நியமனத்தை ஏற்கவில்லை என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தானாகவே ஜீ.எல். பீரிஸ் விலகிக் கொண்டார், தற்பொழுது புதிய ஒருவரை … Read more

இலங்கையில் நிலவும் கடும் வெப்பம்! குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளை தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அதிக திரவங்களை பயன்படுத்துவதன் மூலம் வெப்பமான காலநிலையினால் ஏற்படும் சிக்கல்களை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சருமத்தில் ஏற்படும் சிக்கல்கள் இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய குழந்தைகள்  தினமும் இரு வேளை குளிக்க … Read more