இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள கட்டளை! வெளியானது விசேட வர்த்தமானி

இலங்கையில் ஆயுதம் தாங்கிய அனைத்து படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டளை பிறப்பித்துள்ளார். பொது மக்களின் அமைதியைப் பேணல் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் இன்று (22.04.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அழைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கட்டளை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.  பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை … Read more

பிரித்தானிய துணை பிரதமர் பதவி விலகல்

பிரித்தானியாவின் துணைப்பிரதமர் டொமினிக்  பதவி விலகியுள்ளார்.  டொமினிக் ராப் மீது பல்வேறு அமைச்சகங்களின் செயற்பாடுகளில் தலையிட்டதாக அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை தொடர்ந்து அவர் தனது பதவிகளிலிருந்து விலகுவதாக டுவிட்டரில் பதவி விலகல்  கடிதத்தை வெளியிட்டுள்ளார். டொமினிக் ராப் பதவி விலகிய நிலையில் புதிய துணை பிரதமராக ஆலிவர் டவுடன் நியமிக்கப்பட்டுள்ளார். My resignation statement.👇 pic.twitter.com/DLjBfChlFq — Dominic Raab (@DominicRaab) April 21, 2023 Source link

சந்நிதி ஆலய சூழலில் தேவாலயம் அனுமதி வழங்கவில்லை: முன்னாள் தவிசாளர் மறுப்பு!

சந்நிதி ஆலயத்திற்கு அருகில் தேவாலயம் அமைப்பதற்கு நான் அனுமதி வழங்கியதாக வெளியாகிய செய்திகளில் உண்மை கிடையாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.  முறைப்படியாக வீடு ஒன்றிற்கே அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவ் அனுமதியின் பிரகாரம் அமைக்கும் வீட்டைத் தேவாலயமாக மாற்றினால் உரிய சட்ட நடவடிக்கையினை பிரதேச சபை ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இதுபற்றி முழுமையான விபரம் வருமாறு, அச்சுவேலி ஊடாக சந்நிதி செல்லும் வீதியில் பிரதேச … Read more

கச்சத்தீவை மீட்பதே தமது முதன்மையான நிகழ்ச்சி நிரல்: தமிழக அரசாங்கம்

கச்சத்தீவை மீட்பதே தமது முதன்மையான நிகழ்ச்சி நிரல் என்று தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் (05.04.2023) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் கலந்து கொண்ட தமிழகத்தின் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், கச்சத்தீவை மீட்பதும், பாரம்பரிய மீன்பிடியை மீட்டெடுப்பதும் தமிழக அரசின் முதன்மையான செயல்திட்டமாக இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் தமிழக கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை கடக்கிறார்கள் என்று காரணத்தைக் காட்டி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது … Read more

திருமண கனவில் இருந்த யுவதி – எதிர்பாராத வகையில் பறிக்கப்பட்ட உயிர்

கொழும்பு – கண்டி செல்லும் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரசாஞ்சலி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வேளையில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தேவையின் நிமித்தம் வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளிற்கு அருகில் நின்ற யுவதி உயிரிழந்துள்ளார். ​​ அதிவேகமாக கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளின் அருகில் நின்றிருந்த யுவதி … Read more

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

இலங்கையில் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விமானிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சில பகுதிகளுக்கு அனுமதி இல்லை இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மேல்மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக கல்விமானிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் 2023 … Read more

சித்திரை புத்தாண்டில் ராஜ யோகத்தில் மிதக்க போகும் 8 ராசிக்காரர்கள்! பல நன்மைகளுடன் வெளியான ராசிப்பலன்

சித்திரை மாதம் என்பது தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப் பிறப்பை தமிழர்கள் புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றார்கள். சூரியன் மேஷ இராசிக்குள் நுழையும் ஆரம்பம் சித்திரை மாதத்தில் நிகழ்கிறது. எனவே எதிர்வரும் 14ஆம் திகதி பிறக்கவிருக்கும் சோபகிருது சித்திரை புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு குருவினது ஸ்தாப பலம் என்பது மிகவும் நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் நோய், கடன், வழக்கு பிரச்சினைகள் என்பன காணமல் போகும் நிலை காணப்படுகின்றது. குரு – ராகு சஞ்சாரம் … Read more

வடக்கு, கிழக்கை முடக்குவோம்! அமைச்சர்கள் வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் – பகிரங்க எச்சரிக்கை

புத்த சாசனம், மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஒரு இனவாதி என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடுமையாக சாடியுள்ளார். அத்துடன் வடக்கு, கிழக்கில் எங்கு மலைகளைக் கண்டாலும் புத்தரை அமரவைப்பது தான் வேலை என சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தொல்லியல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை முடக்குவோம், இனவாத அமைச்சர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்க வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் எனவும் … Read more

நாட்டை வாங்குமளவு பலம் படைத்த புலம்பெயர் இலங்கையர்கள்: வெளிநாட்டு பணம் அனுப்புவதில் ஏன் நெருக்கடி..!

புலம்பெயர் இலங்கையர்களாலும் இலங்கையின் பொருளாதாரத்தில் கனிசமான அளவு செல்வாக்கை செலுத்த முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி அல்லது இலங்கையின் பெறுமதி என்று பார்ப்போமாக இருந்தால் இப்போது 70 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்டதான ஒரு பொருளாதாரமாக இருப்பதாக இருக்கிறது. சில புலம்பெயர் இலங்கையர்களின் நிதி … Read more

ஆபத்தான நிலையில் நாடு உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

எதிர்காலத்தில் மிகவும் கடினமான பயணம் உள்ளது. எனவே அடுத்த நான்கு வருடங்களில் நிலையான முன்னேற்றப் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு நேற்று ஊடகங்கள் முன்னிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் கருத்து வெளியிட்டார். எங்களிடம் கடன் மறுசீரமைப்பு சவால் உள்ளது. அடுத்து, சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தில் பல முக்கிய சீர்திருத்தங்கள் உள்ளன. இதுபோன்ற பல விடயங்களை இப்போது … Read more