கோட்டாபயவின் வீட்டிற்கு அருகில் குவிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் இராணுவத்தினர்

“கோ ஹோம் கோட்டா” போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியானதையொட்டி மீரிஹான பகுதியில் வெள்ளிக்கழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. நேற்று (31.03.2023) மாலை போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் முன்னணி செயற்பாட்டாளர்களான டானிஸ் அலி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பலவந்தமாக கடத்தப்பட்டதாக தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்தப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாரும், … Read more

வள்ளுவரும் தமிழ்த்தேசிய அரசியல் விடுதலையும்!

Courtesy: koormai 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய நியாயப்படுத்தலை மறுதலிக்கக்கூடிய அரசியல் உத்திகள் நுட்பமாக வகுக்கப்பட்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் மெது மெதுவாகச் செயற்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், தமிழ்த்தேசியச் சிந்தனையை மேலும் மடைமாற்றக்கூடிய முறையில் சமயக் கோட்பாடுகள் மிகைப்படுத்தப்படுகின்றன. இந்த இடத்தில் ஈழத்தமிழ் அறிஞர்களான கா.பொ.இரத்தினம், தனிநாயகம் அடிகளார் போன்றோர் வள்ளுவம் ஊடாகத் தமிழினத்தை ஒன்றுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய மீள் பார்வை அவசியமாகிறது. ‘குறள் ஆய்வுச் செம்மல்’ ‘உலகத் தமிழர் … Read more

கொழும்பின் புறநகர் பகுதியான மிரிஹானையில் பதற்றம்: மூவர் கைது (Live Video)

நுகேகொடை – மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் (31.03.2023) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும்  இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பதற்றநிலை ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், முன்னணி செயற்பாட்டாளர்களான அனுருத்த பண்டார, டனிஸ் அலி மற்றும் சுதார ஆகிய … Read more

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் பலி

முச்சக்கரவண்டியில் வந்த  அடையாளம் தெரியாத சிலர், குடும்பஸ்தர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு – மட்டக்குளியில் இன்று (31.03.2023) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மொஹமட் சுதுர் மொஹமட் இர்பாட் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரை அவரது வீட்டின் முன் வைத்து தாக்கிவிட்டுச் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். குடும்பஸ்தர் … Read more

இலங்கையில் மற்றுமொரு பெண் மர்மமான முறையில் படுகொலை

இரத்தினபுரியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெல்மடுல்ல – புலத்வெல்கொட பகுதியிலுள்ள வீடொன்றில் 40 வயதுடைய சட்டத்தரணியான துஷ்மந்தி அபேரத்ன என்ற பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணியின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். கொலை செய்யப்படுதற்கு முதல்நாள் இரவு உயிரிழந்த பெண் குடும்பத்தாருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி … Read more

<span class="follow-up">NEW</span> 100 ரூபாவால் குறைந்ததா டொலரின் பெறுமதி! கூகுளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

வழமைக்கு வந்தது கூகுள்.. தொழிநுட்ப கோளாறு காரணமாக  கூகுள் தரவுகளில் இலங்கை ரூபாவுக்கு நிகரான ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், தற்போது மீண்டும் கூகுள் தரவு வழமைக்குத் திரும்பியுள்ளதுடன் தற்போது ரூபாவின் பெறுமதி மீண்டும் பழைய  தரவுகளின் படி காட்டுகின்றது. முதலாம் இணைப்பு அமெரிக்க டொலரின் பெறுமதி திடீரென 100 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூகுள் தரவில் பதிவிடப்பட்டுள்ளது.  இதன்படி, டொலரின் பெறுமதி 236.81 ரூபாவாக காணப்படுகின்றது.  அது மாத்திரமின்றி … Read more

ரூபாவின் பெறுமதியில் கடும் வீழ்ச்சி! மத்திய வங்கியின் தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.01 ரூபாவாகவும், கொள்வனவு விலை 318.27 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி இந்தநிலையில் நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக … Read more

IMF இலங்கைக்கு வழங்கிய கடனுக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்காத கொள்கையைக் கொண்டுள்ள இலங்கை அரசு எப்படி சர்வதேச நிதிகளுக்குப் பொறுப்பேற்க முடியும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தநிலையில், மனித உரிமைகள் பாதுகாப்பு, மத சுதந்திரம் அல்லது தமிழர்களுக்கு எதிரான சர்வதேச குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பான நிபந்தனைகள் ஏதுவுமின்றி, சர்வதேசநாணய நிதியம், இலங்கை அரசுக்கு 3 பில்லியன் டொலரை கடனாக வழங்கியுள்ளது. இது நெறிமுறையற்ற மற்றும் நியாயமற்ற ஏற்பாடு என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி … Read more

இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய பல இடங்கள்! மிலிந்த மொரகொட வலியுறுத்திய விடயம்

இராமாயணம் மற்றும் சீதை பாதைகளை இலங்கை நாடு அபிவிருத்தியினை மேற்கொண்டு வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இராம நவமி விழாவையொட்டி, மிலிந்த மொரகொட நேற்றைய தினம் (30.03.2023) மும்பையில் உள்ள ராஜ்பவனில் மகாராஷ்டிரா ஆளுநர் ரமேஷ் பாயிஸை சந்தித்துள்ளார். மேலும், இலங்கை வளமானது. அழகான மென்மையான மற்றும் மணல் கடற்கரைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள், மலைகள் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்றது என்றும் பெரும்பாலானவை இராமாயணத்துடன் தொடர்பு கொண்டவை எனவும் மொரகொட … Read more