வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள அனுமதி! கிடைக்கும் பெருமளவு பணம்

தற்போது மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.   ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இலங்கைக்கு பெருமளவு பணம் வந்துள்ளது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  நாங்கள் ஏற்கனவே இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுமார் 64 வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளோம். இந்த எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்றும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரப்படுகிறது. அடுத்த … Read more

எரிபொருள் விலை குறைப்பின் எதிரொலி! முச்சக்கரவண்டி கட்டணங்களில் ஏற்படும் மாற்றம்

எரிபொருள் விலை குறைப்பின் எதிரொலியாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த விடயத்தை அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். அதன்படி முதல் மற்றும் இரண்டாவது கிலோமீட்டர்களுக்கு கட்டணத்தைக் குறைக்க அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று முதல் குறையும் கட்டணம் எனவே இன்று முதல் முதலாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாவும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாவும் என கட்டணம் அறவிடப்படவுள்ளது. இதற்கு முன்னதாக முச்சக்கரவண்டி … Read more

பேருந்து கட்டணங்கள் சடுதியாக குறைப்பு

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறைந்தபட்ச கட்டணம்  30 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் பிற கட்டண திருத்தம் தொடர்பில்  நாளை அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எரிபொருள் விலை குறைப்பு அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  Source … Read more

லங்கா ஐஓசி மற்றும் சிபெட்கோவால் குறைக்கப்பட்டது பெட்ரோல் – டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை

லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று (29.03.2023) இரவு முதல் சிபெட்கோவின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முதலாம் இணைப்பு                                                                              … Read more

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று (29.03.2023) காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். டுவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்ந்தும் ஆதரவளிப்பார்கள். அத்துடன், நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்புக்கள் உள்ளது. எரிபொருள் விலை திருத்தம் ஏப்ரல் மாத விலை திருத்தத்தை எதிர்பார்த்து சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை ஆர்டர் செய்யவில்லை. எரிபொருள் … Read more

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான காப்புறுதி நிறுவன பெண் ஊழியர்கள்

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் நேற்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் பிரிவு … Read more

தலைமைத்துவ பொறுப்பு ஏற்க தயார் – நாமல் பகிரங்க அறிவிப்பு

எந்தவொரு அரசியல் பொறுப்பையும் ஏற்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்த பின்னரே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சி முன்வைக்கும் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயார் என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் கட்சியின் மறுசீரமைப்புக்காக பாடுபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். சிங்கள … Read more

இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப்படுகொலை

அம்பாந்தோட்டை, பழைய புந்தல வீதியில் இளைஞர் ஒருவரின் சடலம்மீட்கப்பட்டுள்ளது. கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பாரிய வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாந்தோட்டைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த நபருக்குச் சுமார் 30 வயது இருக்கலாம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். Source link

கச்சத்தீவில் மத கலவரத்தை உருவாக்க புத்தர் சிலை!திருமாவளவன் எடுத்துள்ள நடவடிக்கை(Photo)

கச்சத்தீவில் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் புத்தர் சிலையை நிறுவியமைக்கு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,“சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர். தற்போது வரையில் அங்கே அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது. ஓர் கிறித்தவ திருவிழா கிறித்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் … Read more

இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

விசா இல்லாத வெளிநாட்டவர்களையும் இந்த நாட்டில் குடியுரிமை இல்லாத இலங்கையர்களையும் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்தச் சுற்றிவளைப்பின் போது இந்த மாதம் சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை அவர்களில் சில வெளிநாட்டவர்கள் நாட்டின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளனர். வீசா காலாவதியான அனைத்து நபர்களையும் கைது செய்து நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. Source link