லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, தியகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இன்று இடம்பெற்ற இந்த விபத்தில், வீரபிட்டிய, மொரகஹாபள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த பிரதிப் குமார அஸ்விஸ் (வயது – 30) என்பவரே  உயிரிழந்துள்ளார். குளியாப்பிட்டிய பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்துகொண்டிருந்த ‘கள்’ லொறியும், ஹட்டனில் இருந்து கினிகத்தேன நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.   மழையுடனான காலநிலை இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்று வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். … Read more

கொழும்பில் உள்ள மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பு மாவட்டத்தில் மாரடைப்பினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இவ்வாறான உயிரிழப்புக்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர விபத்து மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.   கொழும்பு மாநகசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாத்திரம் சுமார் 90 சதவீதமான மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.  உயிரிழப்புகள் அதிகம் இந்த பகுதிகளில்  ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முப்பது முதல் … Read more

இப்போதே அவசியமில்லை! சரியான தருணத்திற்காக காத்திருக்கும் மகிந்த

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சரியான நேரத்தில் இணைந்து கொள்வார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் எழுப்பப்பட்ட பொதுஜன பெரமுனவின் அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சரியான நேரத்தில் இணைவோம் மேலும், நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றோம். பொதுஜன பெரமுனவில் இருந்து சென்றவர்கள் … Read more

மீண்டும் வீழ்ச்சியை சந்தித்தது இலங்கை ரூபா! இன்றைய மாற்றம் தொடர்பில் மத்திய வங்கியின் தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.87 ரூபாவாகவும், கொள்வனவு விலை … Read more

எரிபொருட்களின் விலைகள் லீட்டர் ஒன்றுக்கு 120 ரூபா வரையில் குறைக்கப்பட முடியும் என தகவல்

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொருள் வகைகளும் லீட்டர் ஒன்றுக்கு 120 ரூபா வரையில் குறைக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமான ஐக்கிய தொழிற்சங்க ஒன்றியத்தின் பேச்சாளர் ஆனந்த பாலித இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் விலைகள் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் சில்லறை விலை குறைந்தபட்சம் 125 ரூபாவினால் குறைக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மண்ணெண்ணை விலையை லீட்டர் ஒன்றுக்கு 110 ரூபாவினால் குறைக்க முடியும் … Read more

இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து குமார் சங்கக்கார தெரிவித்துள்ள விடயம்

இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அடுத்த 5 – 10 வருடங்கள் சிறந்த நேரம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் மன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுக்க இலங்கையின் இளைஞர்கள் அண்மைக்காலமாக முன்வந்துள்ளனர். மாற்றத்திற்கான நேரம் இந்த நிலையில், அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நாடாக இலங்கை தற்போது காணப்படுகிறது. எனினும் … Read more

கேக் கொள்வனவு செய்வதை தவிருங்கள்! இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்களை கொள்வனவு செய்யவேண்டாம் என்று அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், கொழும்பு துறைமுகத்துக்கு வந்த திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், அவை பழுதடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்வரும் புத்தாண்டுக்கு இந்த முட்டைகளை பயன்படுத்தி கேக் தயாரிக்க வேண்டாம் என்று வெதுப்பக உரிமையாளர்களிடம் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த … Read more

காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டு விவகாரம்! வெளியான அறிக்கை

கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி தேசிய மக்கள் படையினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகள் காலாவதியாகவில்லை என பொலிஸ் பொது பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரினால்  கோட்டை நீதவான் திலின கமகேவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  கடந்த 13ஆம் திகதி பொலிஸ் மக்கள் தொடர்பு முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளரிடம் கோட்டை நீதவான் திலின கமகே வழங்கிய உத்தரவுக்கு அமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அன்றைய தினம் போராட்டத்தின் மீது 26 … Read more

வரவிருக்கின்ற குரு பெயர்ச்சி!பண மழையில் நனைய போகும் இரு ராசிக்காரர்கள்-நாளைய ராசிபலன்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள குரு பெயர்ச்சி பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் குருவால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு இருக்கையில் நாளைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கபோகின்றது என்று பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW     மேஷம் ரிஷபம் … Read more

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள காணியும் பறி போகிறது: ஆளுநர் நடவடிக்கை!

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள 65 ஏக்கர் வவுனியா விவசாய பண்ணை காணியையும் மத்திய அரசின் கீழ் கொண்டு வரும் வகையில் ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார். வவுனியா –  ஏ9 வீதி, தாண்டிக்குளத்தில் விவசாய கல்லூரிக்கு அண்மித்ததாக விவசாயபண்ணை காணப்படுகின்றது. குறித்த விவசாய பண்ணையானது 65 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளதுடன், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஆளுகையின் கீழ் உள்ளது. இந்நிலையில், அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகக் குறித்த வடக்கு மாகாண விவசாய அமைச்சின் காணியை … Read more