அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இரு பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

போலி விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள்  குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும்  ஸ்ரீலங்கன் விமான சேவையில் டுபாயில் இருந்து இன்று காலை வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இலத்திரனியல் விசா இதன்போது அவர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கான ஆவணங்களை விமான நிலைய குடிவரவு அதிகாரியிடம் வழங்கியபோது, அவை போலியானவை என்பதை அந்த அதிகாரிகள் அவதானித்துள்ளனர். அத்துடன், குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவர்களது பயணப் … Read more

சிலை அரசியல் : அறிவும் செயலும்

Courtesy: நிலாந்தன் வடக்கில் கடந்த ஒரு கிழமைக்குள் மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. நடராஜர் சிலை, வள்ளுவர் சிலை,சங்கிலியன் சிலை, என்பவற்றோடு திருநெல்வேலி சந்தையில் மணிக்கூட்டுத் தூபி ஒன்று. இச்சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலைக் கடந்த வாரக் கட்டுரையில் ஓரளவுக்குப் பார்த்தோம். இச் சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் மத அரசியலைத் தனியாகப் பார்க்கவேண்டும். இன்று இக்கட்டுரையானது இச்சிலைகளின் அழகியல் அம்சங்களைக் குறித்த விவாதக் குறிப்புகள் சிலவற்றை முன்வைக்கின்றது. பொதுவெளிச் சிற்பங்கள் அவற்றை நிறுவும் நிறுவனங்கள் அல்லது … Read more

பலரை சோகத்தில் ஆழ்த்திய கொழும்பு மாநகர சபையின் பணியாளர்கள் இருவரின் மரணம்!

கொட்டாஞ்சேனை – ஹெட்டியாவத்தை சுற்றுவட்டத்தில் உள்ள கழிவு நீர் வெளியேற்றும் குழியில் தவறி வீழ்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.   இச் சம்பவம் இன்று (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.  கழிவு நீர் வெளியேற்றும் குழியை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் பணியாளர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.  இருவர் பரிதாபமாக பலி இச்சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பணியாளர்கள் இருவரில் ஒருவர் கழிவு நீர் வெளியேற்றும் குழியில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற மற்றைய நபரும் மலசலகூட குழியில் … Read more

உக்ரைன் போரைப் பார்த்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கம் திரும்பியுள்ள சுவிஸ் மக்கள்…

உக்ரைன் போர் சுவிஸ் மக்களுடைய எண்ணங்கள் மீது பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் காட்டுகின்றன. பெருகும் ஆதரவு உக்ரைன் போர், ஐரோப்பிய ஒன்றியத்தைக் குறித்த சுவிஸ் மக்களின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவு தரும் சுவிஸ் மக்களுடைய எண்ணிக்கை பெருகியுள்ளதை சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் காட்டுகின்றன.  ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன? சுவிஸ் ஊடகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று, ஐரோப்பிய ஒன்றியம் மீது பாஸிட்டிவ் எண்ணம் கொண்ட சுவிஸ் … Read more

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்!

 நாட்டைப்பற்றிச் சிந்தித்து புதிய அரசியல் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு  காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார். பண்டாரகம தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன காரியாலயத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  ‘சிஸ்டம் சேன்ஞ்”அவசியம்தான், அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதற்காக உறுதியாக நிற்பவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில், நாம் அதைச் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்  மேலும் தெரிவித்ததாவது, ஏப்ரல் மாதம் முதலே வீடுகளைத் … Read more

ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியக்குறைப்பு! முடிவை அறிவித்த அமைச்சர்

பணிக்கு வராத மற்றும் கடந்த வாரம் புதன்கிழமை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியக் குறைப்பை விதிக்க தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த விடயத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் எதிராக தேவையான சட்ட நடவடிக்கையும் அமைச்சினால் மேற்கொள்ளப்படும். … Read more

சீரியல் நடிகர் தீபக்கிற்கு இவ்ளோ பெரிய மகனா .. எப்படி இருக்காருன்னு பாருங்க!

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தீபக். இவர் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சேலஞ்ச் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இவர் தென்றல், அண்ணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது தீபக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” என்ற சீரியலில் நடித்து வருகிறார். குடும்ப புகைப்படம்  தீபக் 2008 -ம் ஆண்டு சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அக்னித் மகன் உள்ளார். இந்நிலையில் தீபக் … Read more

வாகன சாரதிகளுக்கு கடுமையாகும் சட்டம்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸ் பிணை வழங்காமல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் தலைமையக கட்டளை அதிகாரிகள், பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளை அழைத்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்த பிறகு, அவர்கள் இரண்டு முறைகளில் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதன் பின்னர், … Read more

தொலைபேசி அழைப்பால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மாணவர் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விசாரணையில் மாணவன் தனது கைப்பேசியில் பேசிக் கொண்டு பாதசாரிகள் பயணிக்கும் மேம்பாலத்தில் பயணிக்காமல் ரயில் தண்டவாளம் ஊடாக பயணிக்கும் போது ரயிலில் மோதுண்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சடலம் … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பணத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை பெற்றுள்ள முதல் கடன் தவணையின் ஒரு பகுதி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் என திறைசேரி தெரிவித்துள்ளதாக  அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், கொடுப்பனவுகள் மற்றும் இதர அன்றாட செலவுகளை பராமரிப்பதற்கு 196 பில்லியன் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் … Read more