நடிகை சமந்தா வீட்டின் சமையல் அறையை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன் பாருங்க

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியான முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் தற்போது திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் யசோதா படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விவாகரத்து பிறகு நடிகை சமந்தா தன்னுடைய தனி வீட்டில் தங்கி வருகிறார் . இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது தனியாக தங்கி வரும் வீட்டின் … Read more

இலங்கையை வருகைதந்துள்ள நான்காயிரம் உக்ரைன் பிரஜைகள்

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சுற்றுலா பயணிகள் 30 நாட்களுக்கான விஸாவை பெற்றே நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அமைச்சு கூறுகின்றது. எனினும், உக்ரைனில் தற்போது ஏற்பட்டு யுத்த சூழ்நிலைக்கு மத்தியில், நாடு திரும்ப முடியாத உக்ரைன் பிரஜைகளுக்கு விஸா கால எல்லையை அதிகரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஸா காலம் முடிவடைந்த பின்னர், நாடு திரும்ப விரும்பும் உக்ரைன் பிரஜைகளை, நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

இலங்கையில் தினசரி 10 மணிநேர மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் (Video)

மழை பெய்தால் மாத்திரமே மின்வெட்டை தவிர்க்க முடியமெனவும், அவ்வாறு இல்லையெனில் மார்ச் மாதம் முதல் தினசரி 10 மணிநேர மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படுமெனவும் இலங்கை மின்சார சபையினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நேற்று முதல் 5 மணித்தியாலங்களுக்கு மேலான மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்வதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் இந்த நிலைமை மோசமாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா அதிருப்தி!

 இலங்கையின் பல மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குடியியல் இடம் மற்றும் சுதந்திரமான நிறுவனங்களை உறுதிசெய்து, தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே இலங்கை நிலையான வளர்ச்சி, அமைதி மற்றும் நீடித்த நல்லிணக்கத்தை அடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட அண்மைக்கால நடவடிக்கைகளை பச்லெட் அங்கீகரித்துள்ளார். எனினும் தேவையான சட்ட, நிறுவன மற்றும் பாதுகாப்புத் துறையில், சர்வதேச மனித … Read more

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் நற்சான்றிதழ்களை கையளித்தார்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங் தனது நற்சான்றிதழ்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்ததன் பின்னர் இன்று உத்தியோகபூர்வமாக தனது பதவியை ஆரம்பித்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. “இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன். ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், செழிப்பை அதிகரிக்கவும், அனைவருக்கும் ஆரோக்கியமான, இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிசெய்யவும் இந்த நாட்டு அரசு மற்றும் மக்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” என்று தூதுவர் சுங் கூறினார். சியோலில் … Read more

தேசிய ஊடகத்திலிருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழி நீக்கம்: மனோ கணேசன் கண்டனம் (Video)

இலங்கை அரச ஊடகமான ரூபவாஹினி தொலைகாட்சி அலைவரிசையின் அடையாள குறியீட்டில் இருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழி அகற்றப்பட்டமை பிரிவினைவாதத்தின் மற்றுமொரு நடவடிக்கை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபணம், “தேசிய” மற்றும் “இணைப்பு” மொழிகளை தனது “அடையாள குறியீட்டில்” இருந்து திடீரென தவிர்த்து கொண்டிருப்பது, கண்டிக்கதக்கது. தனியார் ஊடக நிறுவனங்கள் தங்களது, அடையாளத்தை எவ்விதமாக காட்டி, திருத்திக்கொண்டாலும், அரசாங்கத்தின் தேசிய ஊடக நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதை … Read more

வார இறுதி நாட்களில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு (Photos)

வார இறுதிக்கான மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பகல் நேர மின்வெட்டு 3 மணி நேரமாக சனிக்கிழமை 26 ஆம் திகதி அமையும் எனவும் அது குழுக்கள் A, B, C ஆகியவற்றின் கீழ் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேர மின்வெட்டு 2 1/2 மணி நேரமாக சனிக்கிழமை 26 ஆம் திகதி இருக்கும் எனவும் மற்ற அனைத்து குழுக்களும்  இதில் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை (27) பகலில் … Read more

இலங்கையில் திடீரென எரிபொருள் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து வகையான டீசல் லீட்டர் ஒன்றுக்கு 15 ரூபாவும், பெட்ரோல் லீட்டர் ஒன்றுக்கு 20 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.   Source link

பல்கலைக்கழக பட்டம் பெற சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி

பேராதனையில் இருந்து அக்மீமன பகுதியை நோக்கிச் சென்ற சொகுசு காரொன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.   பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை ஏற்றிச் சென்ற சொகுசு காரொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கார் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், அக்மீமன பகுதியைச் சேர்ந்த யு.கமகே ரத்னசேன என்ற 67 வயதுடைய நபர் ஒருவரே  உயிரிழந்துள்ளார்.  பேராதனைப் … Read more

சுமத்ரா தீவில் பாரிய நிலநடுக்கம் – இலங்கை தொடர்பில் ஆராயும் மத்திய நிலையம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை சுமார் 9.40 மணியளவில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமத்ரா தீவின் வடக்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் நிலத்தின் அடியில் ஏற்பட்டதால் சுனாமிப் பேரலை எச்சரிக்கையை விடுக்கவில்லை என இந்தோனேசிய நிலவியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Source link