அறிகுறியற்ற கோவிட் தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம்

கோவிட் தொற்றினை சாதாரணமானதாக கருதுவது புத்திசாலித்தனமானதல்ல என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்ளாத பல தொற்றாளர்கள் இன்னும் சமூகத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு எவ்வித கோவிட் அறிகுறிகளும் வெளிப்படுத்தப்படாமல் சுகதேகிகளை போன்று காணப்படுவதாகவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பூரண தடுப்பூசியேற்றம் மற்றும் முறையாக சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றல் என்பன கோவிட்  தொற்றிலிருந்து பாதுகாப்பினை பெறக்கூடிய ஆகச் சிறந்த வழிமுறைகளாகுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் … Read more

உக்ரைன் – ரஷ்ய யுத்தம்:இலங்கை எதிர்நோக்க போகும் நெருக்கடிகள்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்த மோதல்கள் இலங்கைக்கு குறுகிய மற்றும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச உறவுகள் சம்பந்தமான வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் இலங்கை தற்போது அந்நிய செலாவணி மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது என்பது இரகசியமான விடயமல்ல. இந்த யுத்த மோதல்கள் காரணமாக இலங்கை எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடி, அதேபோல் எரிசக்தி நெருக்கடிக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட … Read more

கோடிக்கணக்கான ரூபா மின்சார கட்டணம் செலுத்தாத அமைச்சர் யார்? அம்பலப்படுத்தும் ஊடகம்

இலங்கையில் கோடிக்கணக்கான ரூபா மின்சார கட்டணத்தை செலுத்ததாக அமைச்சர் தொடர்பில் தகவல் வெளியாகி இருந்தது. சுகாதார அமைச்சர் தங்கியிருக்கும் வீட்டின் மின்சார கட்டணமே செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டுக்கான மின்சார கட்டண நிலவை 12,056,803.38 ரூபா இன்னும் செலுத்தப்படவில்லை என சபை சுட்டிக்காட்டியுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் அவர் குடியிருக்கும் சரண வீதியில் அமைந்துள்ள வீட்டுக்கே மின்கட்டணம் செலுத்தவில்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் … Read more

வார இறுதியில் மின் தடை வேண்டாம்! பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவித்தல்

இவ்வார இறுதியில், இரவு வேளைகளில் மின்வெட்டை தவிர்க்குமாறு அல்லது குறைந்தபட்ச மின்வெட்டையேனும் விதிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியில் இடம்பெறும் அண்மைய மின்வெட்டுகளின் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. இதன்காரணமாக, இவ்வார இறுதியில் மின்வெட்டை தவிர்க்குமாறு  மின்சார சபைக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க அறிவுறுத்தியுள்ளார்.   Source link

உலகளாவிய ரீதியில் எண்ணெய், தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – இலங்கையிலும் பாதிப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக உலக சந்தையில் பாரிய மாற்றங்கள் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பல நாடுகளில் பங்கு பரிவர்த்தனை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதுடன், தங்கம் மற்றும் எரிபொருளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை தற்போது 105.79 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் WTI எண்ணெய் ஒரு பீப்பாய் 100.54 டொலராக உயர்ந்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகிலேயே இதுவே அதிகபட்ச எண்ணெய் விலையாகும். இதற்கிடையில், ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியால், … Read more

சுமத்ரா தீவில் பாரிய நிலநடுக்கம் – இலங்கை தொடர்பில் ஆராயும் மத்திய நிலையம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை சுமார் 9.40 மணியளவில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமத்ரா தீவின் வடக்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் நிலத்தின் அடியில் ஏற்பட்டதால் சுனாமிப் பேரலை எச்சரிக்கையை விடுக்கவில்லை என இந்தோனேசிய நிலவியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Source link

இலங்கையில் சிக்கியுள்ள உக்ரேன் நாட்டவர்களுக்கு நெருக்கடி நிலை

உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யாவின் பாரிய தாக்குதலை அடுத்து அந்நாட்டுக்கான அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள உக்ரைன் நாட்டவர்கள் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளனர். தங்கள் நாட்டுக்கு திரும்பி செல்ல முடியாத நிலைமை காரணமாக தொடர்ந்து இலங்கையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த உக்ரைன் நாட்டவர்களுக்கு நாடு திரும்ப எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என தெரியாத நிலையில் தங்கள் உறவினர்களை தொடர்பில் அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  உக்ரைனின் தற்போதைய சூழ்நிலையால், அங்குள்ள … Read more

மின் வெட்டு காரணமாக சுகாதார துறை முடங்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இன்று முதல் மின்வெட்டு ஐந்து மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாலும், எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு இல்லாமையாலும் சுகாதாரத் துறை விரைவில் முடங்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மற்றும் அவசரகால பதிலளிப்பு (DMER) பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று இதனை தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறை தற்போது வைத்தியசாலைகளில் இருக்கும் மின்பிறப்பாக்கிகள் மற்றும் பேக்கப் ஜெனரேட்டர்களையே பெரிதும் நம்பியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு இதற்கு தடையாக இருக்கும். வைத்தியசாலைகளுக்கான மின்பிறப்பாக்கிகளை இலங்கை மின்சார சபையே … Read more

உக்ரைனில் உள்ள இலங்கை பிரஜைகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

உக்ரைனில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதற்கமைய,உக்ரைனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அவசர தொலைபேசி இலக்கமான +90 534 456 94 98, +90 312 427 10 32 மற்றும் மின்னஞ்சல் முகவரியான [email protected] ஆகியவற்றிற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உக்ரேன்மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முதல் நாளான இன்று இரு … Read more

நாடு ஸ்தம்பித நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது! – அமைச்சர் தயாசிறி ஜயசேகர

நாடு இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். டீசல் மற்றும் பெட்ரோல் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், சாலையில் எப்போது, ​​​​எங்கு வாகனங்கள் நிற்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார். துறைமுகத்தில் சிக்கியிருந்த டீசல் கப்பல் நிதிப் பற்றாக்குறையால் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், துறைமுகத்தில் … Read more